திருக்குறள் - குறள் 1210

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: நினைந்தவர்புலம்பல்.


திருக்குறள் - குறள் 1210


விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

மு.வரதராசனார் உரை:
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

சாலமன் பாப்பையா உரை:
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

பரிமேலழகர் உரை:
(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதி-மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக. (கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும


மணக்குடவர் உரை:
என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி. பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மதியே! எனது நெஞ்சத்தில் எப்போதும் இருந்துவிட்டுப்போன காதலரை யான் என் கண்ணினாலேனும் காணுகின்ற வரையில் நீ மறையாமல் இருப்பாயாக: நீ வாழ்வாயாக.

Translation:
Set not; so may'st thou prosper, moon! that eyes may see
My love who went away, but ever bides with me.

Explanation:
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்