திருக்குறள் - அதிகாரம் பொழுதுகண்டிரங்கல்
-
Showing 1 - 10 of 10
-
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. -
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. -
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். -
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். -
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை. -
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். -
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். -
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. -
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. -
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.