திருக்குறள் - குறள் 1225
- குறள் பால்:
- காமத்துப்பால்
- குறள் இயல்:
- கற்பியல்
- அதிகாரம்:
- பொழுதுகண்டிரங்கல்
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
திருக்குறள் - குறள் 1225 உரை
கலைஞர் மு.கருணாநிதி உரை
மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன? என்று புலம்புகிறது.
மு.வரதராசனார் உரை
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.
சாலமன் பாப்பையா உரை
காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?.
பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) (காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள்) யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது? (கூடிய ஞான்று பிரிவர் எ
மணக்குடவர் உரை
காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?. இது மாலையது பண்பின்மையை உட்கொ
திருக்குறளார் வீ. முனிசாமி உரை
காலையும் மாலையும் எம் காதலர் கூடியிருந்தபோது வந்தன போலல்லாமல் வேறுபட்டு வருகின்றன. யான், காலைக்குச் செய்த நன்மை என்ன?. மாலைக்குச்செய்த தீமை என்ன?.
Translation
O morn, how have I won thy grace? thou bring'st relief
O eve, why art thou foe! thou dost renew my grief.
Explanation
What good have I done to morning (and) what evil to evening?.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this kural.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
அதிகாரம் 123: பொழுதுகண்டிரங்கல்
குறள் 1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.
குறள் 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.
குறள் 1223 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.
குறள் 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.
குறள் 1226 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.
குறள் 1227 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.
குறள் 1228 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.
குறள் 1229 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.
குறள் 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.