திருக்குறள் - குறள் 1224

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பொழுதுகண்டிரங்கல்.


திருக்குறள் - குறள் 1224


காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது.

மு.வரதராசனார் உரை:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் -


மணக்குடவர் உரை:
காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும். இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் இருந்தபொழுதெல்லாம் எனது உயிர்தழைக்கும்படியாக வந்த மாலைப் பொழுது அவர் இல்லாத இப்போது கொலை செய்கின்ற களத்திற்கு வருகின்ற கொலைஞர்களைப் போல வருகின்றது.

Translation:
When absent is my love, the evening hour descends,
As when an alien host to field of battle wends.

Explanation:
In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்