திருக்குறள் - அதிகாரம் புணர்ச்சிவிதும்பல்
-
Showing 1 - 10 of 10
-
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. -
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். -
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். -
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. -
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து. -
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. -
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. -
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. -
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். -
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.