திருக்குறள் - குறள் 1286
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல்.
திருக்குறள் - குறள் 1286
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அவரைக் காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.
மு.வரதராசனார் உரை:
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறு
மணக்குடவர் உரை:
அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலரைக் காணுகின்றபோது அவரது தவறுகளைக் காண முடியாதவளாகின்றேன். அவரைக் காணாத போது தவறுகள் அல்லாமல் பிறவற்றைக் காண்கின்றிலேன்.
Translation:
When him I see, to all his faults I 'm blind;
But when I see him not, nothing but faults I find.
Explanation:
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்