திருக்குறள் - குறள் 1283

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல்.


திருக்குறள் - குறள் 1283


பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

மு.வரதராசனார் உரை:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா உரை:
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? எ


மணக்குடவர் உரை:
தம்மை விரும்பாது தன்மனம் விரும்புவனவே செய்தானாயினும் கொண்கனைக் காணாது என்கண்கள் அமையமாட்டா. இவையெல்லாம் ஊடற்பகுதியானமையும் முன்னுறுபுணர்ச்சி யின்மையும் ஆமாறு கண்டுகொள்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நம்மை விரும்பாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும் தலைவனை எனது கண்கள் பார்க்காமல் இருக்கமாட்டா.

Translation:
Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.

Explanation:
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்