திருக்குறள் - அதிகாரம் புலவி
-
Showing 1 - 10 of 10
-
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. -
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். -
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். -
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. -
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து. -
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. -
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று. -
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. -
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. -
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.