Skip to content

Popular

திருக்குறள் - குறள் 1308

குறள் பால்:
காமத்துப்பால்
குறள் இயல்:
கற்பியல்
அதிகாரம்:
புலவி
குறள் 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
— திருவள்ளுவர் · புலவி
WhatsApp

திருக்குறள் - குறள் 1308 உரை

கலைஞர் மு.கருணாநிதி உரை

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?.

மு.வரதராசனார் உரை

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை

இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.

பரிமேலழகர் உரை

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்? ('அறிதல்' - ஈண்டு ஊட

மணக்குடவர் உரை

யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து. இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

நம்பொருட்டு வேதனையுற்றார் என்று அந்த வேதனையினை அறியும் அன்பில்லாத காதலரைப் பெறாதபோது, ஒருவர் நொந்து கொள்ளுவதால் பயன் என்ன?.

Translation

What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?.

Explanation

What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?.

திருக்குறள் - குறள் 1308
திருக்குறள் ஓவியம் - குறள் 1308
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this kural.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அதிகாரம் 131: புலவி