பாடகர் : ஏ. எம். ராஜா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்
ஆண் : ஆ….ஆ….ஆ…ஆ….
இணை ஏதும் இல்லாத
விசால சிருஷ்டியில்லே
ஏ….ஏ….ஏ….
இணை ஏதும் இல்லாத
விசால சிருஷ்டியில்லே
விசித்திரங்கள் எல்லாம் எனதாகுமே
ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
ஆண் : ஆ….ஆ…..ஆ…..
தலுக்கு தலுக்கெனவே
தாரகை மின்னிடும்
நீல வானகமும் எனதாகுமே
எண்ணிலா மாந்தருக்கு
இதய வேகம் தரும்
குளிர்ந்த வெண்ணிலாவும் எனதாகுமே..ஏ….
ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
ஆண் : ஹா….ஆ….ஹா….ஆ….
மனோகரமாக குதூகலம் தரும்..ம்ம்ம்…
வசந்த ருதுவும் எனதாகுமே
ஏ…ஏ….ஏ….
மலரோடு சேர்ந்து விளையாடியே வரும்…ம்ம்
மலய மாருதமும் எனதாகுமே
ஏ…..ஏ…..ஏ…..ஏ…..
ஆண் : எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே