Tamil Songs lyrics · 2011
Yaradu Yaradu lyrics from Kavalan movie - காவலன் திரைப்படத்திலிருந்து யாரது யாரது யாரது பாடல் வரிகள்
யாரது யாரது யாரது பாடல் 2011-ல் வெளியான காவலன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: வித்தியாசாகர் · பாடியவர்: கார்த்திக்
Yaradu Yaradu is a song from the 2011 Tamil film Kavalan, composed by Vidyasagar and sung by Karthik.
- Movie Name
- Kavalan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காவலன்
- Music
- Vidyasagar
- Year
- 2011
- Singers
- Karthik
Lyrics(Tamil)
யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
யாரது...யாரது யாரது...யார் யாரது
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது...யாரது யாரது...யார் யாரது
உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்
யாரது...யாரது யாரது...யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது...யாரது யாரது...யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
Yaradu Yaradu song FAQ
Who sang Yaradu Yaradu?
Yaradu Yaradu was sung by Karthik for the 2011 Tamil film Kavalan.
Who composed the music for Yaradu Yaradu?
The music for Yaradu Yaradu was composed by Vidyasagar.
Which movie is the song Yaradu Yaradu from?
Yaradu Yaradu is from the Tamil film Kavalan, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.
யாரது யாரது யாரது பாடலை பாடியவர் யார்?
யாரது யாரது யாரது பாடலை பாடியவர் கார்த்திக்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.