Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Velli Malarae lyrics from Jodi movie - ஜோடி திரைப்படத்திலிருந்து வெள்ளி மலரே பாடல் வரிகள்

வெள்ளி மலரே பாடல் 1999-ல் வெளியான ஜோடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Velli Malarae is a song from the 1999 Tamil film Jodi, written by Vairamuthu and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜோடி
Year
1999
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

ஓ வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஏ
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே

வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும்
நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெள்ளி மலரே

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

வெள்ளி மலரே வெள்ளி மலரே

Velli Malarae song FAQ

Who sang Velli Malarae?

Velli Malarae was sung by S. P. Balasubramaniam for the 1999 Tamil film Jodi.

Who wrote the lyrics of Velli Malarae?

The lyrics of Velli Malarae were written by Vairamuthu.

Which movie is the song Velli Malarae from?

Velli Malarae is from the Tamil film Jodi, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.

வெள்ளி மலரே பாடலை பாடியவர் யார்?

வெள்ளி மலரே பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜோடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்