Tamil Songs lyrics · 1999
Anjathe Jeeva lyrics from Jodi movie - ஜோடி திரைப்படத்திலிருந்து அஞ்சாதே ஜீவா பாடல் வரிகள்
அஞ்சாதே ஜீவா பாடல் 1999-ல் வெளியான ஜோடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: Seerkazhi Govindarajan
Anjathe Jeeva is a song from the 1999 Tamil film Jodi, written by Vairamuthu and sung by Seerkazhi Govindarajan.
- Movie Name
- Jodi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜோடி
- Year
- 1999
- Lyrics
- Vairamuthu
- Singers
- Seerkazhi Govindarajan
Lyrics(Tamil)
ஆனந்த பூவே அன்பே வா
அஞ்சாதே ஜீவா நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே வா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின் உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பூக்களையே ஆயுதமா கொண்டவன் நீதானே
பூவிரிந்து என்னுயிரை கொன்றவன் நீதானே
என் உயிருக்குள் சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம் அறிகின்ற காற்றே வா
தேவைகள் தீர்க்கிற தேவா தேவா வா
ஒரு பூவுக்குள் வசிக்கிற நிலவே வா
என் போர்வைக்குள் அடிக்கிற வெயிலே வா
குளிர் புன்னகை பூக்கும் மலரே வா ஜீவா ஜீவா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காதல் இல்லாத நகரம்
அது காற்று இல்லாத நரகம்
காற்று இல்லாத இடமும் அட
காதல் தெரியாமல் நுழையும்
கண்ணில் மணியாகி உன்னில் உயிராகி
காதல் யோகம் கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம் எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும்
ஒன்பது கிரகம் தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும் முடியாது காதல் பயணம்
(என்னை கொள்ளை இட்டுபோகும்.)
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
காதல் தப்பென்று சொல்ல
அது கெட்ட சொல் ஒன்றும் அல்ல
இரவு நேரத்து போரில் நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில் இருவரும் ஒன்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின் போதும்
உன் மார்பில் நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற போதும்
உன்னை நெஞ்சில் நான் தாங்க வேண்டும்
மீண்டும் மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்
(. என்னை கொள்ளை இட்டுபோகும்.)
Anjathe Jeeva song FAQ
Who sang Anjathe Jeeva?
Anjathe Jeeva was sung by Seerkazhi Govindarajan for the 1999 Tamil film Jodi.
Who wrote the lyrics of Anjathe Jeeva?
The lyrics of Anjathe Jeeva were written by Vairamuthu.
Which movie is the song Anjathe Jeeva from?
Anjathe Jeeva is from the Tamil film Jodi, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.
அஞ்சாதே ஜீவா பாடலை பாடியவர் யார்?
அஞ்சாதே ஜீவா பாடலை பாடியவர் Seerkazhi Govindarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.