Skip to content

Popular

Tamil Songs lyrics · 1961

Varuga varuga lyrics from Panithirai movie - பணித்திரை திரைப்பட பாடல் வரிகள்

Varuga varuga பாடல் 1961-ல் வெளியான பணித்திரை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: பி. சுசீலா

Varuga varuga is a song from the 1961 Tamil film Panithirai, written by Kannadasan, composed by K. V. Mahadevan and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
பணித்திரை
Year
1961
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்….
ஓஹோ ஓ ஹோ ஓஓ

பெண் : வருக வருகவென்று சொல்லியழைப்பார்
சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்
வருக வருகவென்று சொல்லியழைப்பார்
சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்

பெண் : ஒரு மகள் பெற்றோமென்று
உள்ளம் மகிழ்வார்
ஒரு மகள் பெற்றோமென்று
உள்ளம் மகிழ்வார்
தந்தை உற்சாகம் பொங்கிவரக்
கண்ணீர் வடிப்பார்
தந்தை உற்சாகம் பொங்கிவரக்
கண்ணீர் வடிப்பார்

பெண் : நீல விதானத்து
நித்திலப்பூம் பந்தலிட்டு
கோலங்கள் பொங்கக் குளிர்ந்த மணம் பரவி வரும்
ஆளழகை மிஞ்சும் அரசாணிக் காலிருக்கும்
ஆரத்தித் தட்டெடுத்து அன்னையினம் ஓடிவரும்

பெண் : பெண்ணெங்கே எங்கே என்ற குரல் கேட்கும்
கூந்தல் பின்னலிடும் தோழியின்
கை துடிதுடிக்கும்
பெண்ணெங்கே எங்கே என்ற குரல் கேட்கும்
கூந்தல் பின்னலிடும் தோழியின்
கை துடிதுடிக்கும்

பெண் : கண்ணிரண்டும் கால் பார்க்கும் தலைகுனியும்
கண்ணிரண்டும் கால் பார்க்கும் தலைகுனியும்
வண்ணக் காலிரண்டும் மெல்ல மெல்ல
நடை நடக்கும்
வண்ணக் காலிரண்டும் மெல்ல மெல்ல
நடை நடக்கும்

பெண் : கை நிறைய மலரெடுத்து
மாதர் மழை பொழிவார்
கனகமணிச் சரமெடுத்து
அவர் கையில் தருவார்
கொட்டுங்கள் மேளமெனக்
குரலொன்று கேட்கும்
குளிர்ந்த முகம் சிவந்து விடும்
இளமேனி சிலிர்க்கும்

பெண் : பிள்ளை பெற்ற மாதர் என்னை
வாழ்த்தியருள்வார் என்
பெண்மை நிறைவானதென்று
நானும் மகிழ்வேன்

பெண் : காரிருளில் ஓர் கிழவி
மெல்ல வருவாள்
காரிருளில் ஓர் கிழவி
மெல்ல வருவாள்
அவர் காத்திருக்கும் தனியிடத்தைக்
காட்டி மறைவாள்
அவர் காத்திருக்கும் தனியிடத்தைக்
காட்டி மறைவாள்

பெண் : தூங்குதல் போல் நடிக்கின்ற
தோழியர்க்கும் தெரியாமல்
துணையிருக்கும் இடம் சென்று
நிலம் பார்த்து நிற்பேன்

பெண் : அவர் முதலில் பேசுவதா
நான் பேசலாமா
அத்தான் என்றழைப்பதற்கும்
இடம் அதுதானா
கைத்தொட்டு எனை அழைத்தால்
நான் என்ன சொல்வேன்
கண்மூடி மெய்மறந்து
ஊமைபோல் இருப்பேன்

Lyrics(English)

Female : Hmmm mmm mmm hmmm …
Ohooo ooo hooo oooo

Female : Varuga varugavendru solli azhaippaar
Silar vaasal vazhiyil nindru panneer thelippaar
Varuga varugavendru solli azhaippaar
Silar vaasal vazhiyil nindru panneer thelippaar

Female : Oru magal petrom endru
Ullam maghizhvaar
Oru magal petrom endru
Ullam maghizhvaar
Thandhai urchaagam pongi vara
Kanneer vadippaar
Thandhai urchaagam pongi vara
Kanneer vadippaar

Female : Neela vidhaanathu
Nithila poom pandhalittu
Kolangal ponga kulirndha manam paravi varum
Aaalazhagai minjum arasaanai kaalirukkum
Aarathi thatteduthu annai inam odi varum

Female : Pennengae engae endru kural ketkkum
Koondhal pinnalidum thozhiyin kai
Thudi thudikkum
Pennengae engae endru kural ketkkum
Koondhal pinnalidum thozhiyin kai
Thudi thudikkum
Kannirandum kaal paarkkum thalai kuniyum
Kannirandum kaal paarkkum thalai kuniyum
Vanna kaalirandum mella mella
Nadai nadakkum
Vanna kaalirandum mella mella
Nadai nadakkum

Female : Kai niraya malareduthu
Maadhar mazhai pozhivaar
Kanaga mani charameduthu
Avar kaiyil tharuvaar
Kottungal melamena
Kural ondru ketkkum
Kulirndha mugam sivandhu vidum
Ilamaeni silirkkum

Female : Pillai petra maadhar ennai
Vaazhthi arulvaar en
Penmai niraivaanadhendru
Naanum maghizhven

Female : Pillai petra maadhar ennai
Vaazhthi arulvaar en
Penmai niraivaanadhendru
Naanum maghizhven

Female : Kaarirulil or kizhavi
Mella varuvaal
Kaarirulil or kizhavi
Mella varuvaal
Avar kaatthirukkum thani idathai
Kaati maraivaal
Avar kaatthirukkum thani idathai
Kaati maraivaal

Female : Thoongudhal pol nadikkindra
Thozhiyarkkum theriyaamal
Thunai irukkum idam sendru
Nilam paarthu nirppen

Female : Avar mudhalil pesuvadhaa
Naan pesalaamaa
Aththaan endrazhappadharkkum
Idam adhu thaanaa
Kai thottu enai azhaithaal
Naan enna solven
Kan moodi mei marandhu
Oomai pol iruppen

Varuga varuga song FAQ

Who sang Varuga varuga?

Varuga varuga was sung by P. Susheela for the 1961 Tamil film Panithirai.

Who wrote the lyrics of Varuga varuga?

The lyrics of Varuga varuga were written by Kannadasan.

Who composed the music for Varuga varuga?

The music for Varuga varuga was composed by K. V. Mahadevan.

Which movie is the song Varuga varuga from?

Varuga varuga is from the Tamil film Panithirai, released in 1961. The film has 8 songs on Tamilputhumai.

Varuga varuga பாடலை பாடியவர் யார்?

Varuga varuga பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பணித்திரை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்