பாடகர்கள் : ஜிக்கி மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு
பெண் : வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு
பெண் : புலவர் வாழும் நாடு
நற்புகழ் மணக்கும் நாடு
பெண் : புலவர் வாழும் நாடு
நற்புகழ் மணக்கும் நாடு
செந்தேன் மணக்கும் காவியங்கள்
சிறந்து நிற்கும் நாடு
செந்தேன் மணக்கும் காவியங்கள்
சிறந்து நிற்கும் நாடு
பெண் : உயர் வீரர் தமிழ் மாந்தர் இதை
ஆண்டனர் மூவேந்தர்…
ஆஆ……ஆ……ஆ……ஆ…..ஆ….
வீரர் தமிழ் மாந்தர் இதை
ஆண்டனர் மூவேந்தர்
மாறாத சீரோடு நேரான பண்போடு
பெண் : வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு
பெண் : தேசிங்கு ராஜமகன் வந்துதித்த வேளையிலே
செல்வமே… நீயும் பிறந்தாய்…. ஆ…..ஆ……ஆ…
உங்கள் தந்தையர்கள் இரு பேரும்
ஒன்றுபட்டு வாழ்வது போல்… ஆ……ஆ……ஆ….
ஈருடலும் ஒருயிராய் இணை பிரியாதிருப்பீரே……ஹே…..ஹே…
பெண் : தேசமெங்கும் கூடும் மக்கள்
போற்றும் செல்வந்தான்
தேசமெங்கும் கூடும் மக்கள்
போற்றும் செல்வந்தான்
எந்நாளும் நேசம் வாழும் வண்ணம்
சேர்க்கும் இன்பந்தான்
எந்நாளும் நேசம் வாழும் வண்ணம்
சேர்க்கும் இன்பந்தான்
எங்கள் தீரன் அகமத்கான்
பெற்ற செல்வம் மகமத்கான்
எங்கள் தீரன் அகமத்கான்
பெற்ற செல்வம் மகமத்கான்
தேசமெங்கும் கூடு மக்கள்
போற்றும் செல்வந்தான்
பெண் : வான் முகில்கள் யாவும்
உன் வண்ண முகம் நாடும்
வான் முகில்கள் யாவும்
உன் வண்ண முகம் நாடும்
கலை மான் மயங்கும் உன்னழகை
சிரம் வணங்கிப் பாடும்
கலை மான் மயங்கும் உன்னழகை
சிரம் வணங்கிப் பாடும்
பெண் : கண் பார்த்திருந்தால் போதும்
எம் கவலை பறந்தோடும்…
ஆ……ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….
பார்த்திருந்தால் போதும் எம் கவலை பறந்தோடும்
கண்ணாலே விண்ணாளும் கண்ணாளா உன்னாலே
பெண் : வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…
முன்னவனே முதலவனே
முடிவில்லா ஆண்டவனே… ஏ… ஏ….
தன்னந் தனியவனே தாய் தந்தை இல்லாதவனே…
எங்கள் திருமகனை என்றென்றும் காத்தருள்வாய்
லாயிலாஹ இல்லல்லாஹு முகம்மது ரசூலுல்லாஹி
பெண் : ஜாதி மத பேதம்
வீண் சஞ்சலங்கள் ஏதும்
பெண் : ஜாதி மத பேதம்
வீண் சஞ்சலங்கள் ஏதும்
இங்கில்லா வண்ணம் வாழ்வோம்
இந்நாட்டிலுள்ளோர் யாரும்
இங்கில்லா வண்ணம் வாழ்வோம்
இந்நாட்டிலுள்ளோர் யாரும்
பெண் : சம நீதிமுறை செய்வோம்
முன்னேற்ற வழி செல்வோம்…
ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..
நீதிமுறை செய்வோம் முன்னேற்ற வழி செல்வோம்
எல்லோரும் ஒன்றாகும் நல்லோர்கள் சொல்லாலே
பெண் : வாழ்க எங்கள் பொன்னாடு
வண்ணத் தமிழ் நன்னாடு
வாழ்க என்றே எந்நாளும் அன்போடு
வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு