பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பானுமதி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : இயலோடு இசை போலே….ஏ……ஏ……ஏ….
எழில் மேவும் சோலையிலே…..ஏ…..
இணை இல்லா ஜதை சேர்ந்ததே…
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ….ஹா…..ஆ….ஆ….ஆ…..
பெண் : புயல் மேவும் அலை போலே….ஏ……ஏ……ஏ….
பொங்கிடும் காதலரால்…..ஹாஹா
பொறாமை கொள்ள நேர்ந்ததே…
ஆ…..ஆஅ…..ஆ….
பெண் : வனமேவும் ராஜகுமாரா
வளர் ஜோதியே சுகுமாரா
வனமேவும் ராஜகுமாரா
வளர் ஜோதியே சுகுமாரா
ஆண் : மனமோகனா சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மறவேன் உன்னை எழில் தீரா
மறவேன் உன்னை எழில் தீரா
இருவர் : வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் இனி மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனி மேலே