பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பானுமதி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
ஆண் : சரச ராணி கல்யாணி சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதிவதனி
சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதிவதனி
சரச ராணி கல்யாணி
பெண் : புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிக
புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிக
புனித ராஜ குல திலகா
பெண் : கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த
வனிதை வாழ்வில் நீர் அல்லவா
கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த
வனிதை வாழ்வில் நீர் அல்லவா
ஆண் : நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
பெண் : என்னை புகழ்ந்து பேசுவது
தகுமா……..ராஜா
என்னை புகழ்ந்து பேசுவது தகுமா
ஆண் : மனம் மகிழ்ந்து கூறும் மொழி
நிஜமாய்……..ராணி
மனம் மகிழ்ந்து கூறும் மொழி நிஜமாய்
பெண் : நிலை மறந்தேன் கண்ணா
ஆண் : உளம் தெரிந்தேன் கண்ணே
பெண் : நிலை மறந்தேன் கண்ணா
ஆண் : உளம் தெரிந்தேன் கண்ணே
இல்லறமாம் நல்லறம் நாடும்
முறையாலே இணையான
இருவர் : இருவரால் வளரும் நேசம் அதில்
ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
இருவரால் வளரும் நேசம்