Tamil Songs lyrics · 2012
Vaanjay Mikunthida lyrics from Charulatha movie - சாருலதா திரைப்படத்திலிருந்து வாஞ்சை மிகுந்திட பாடல் வரிகள்
வாஞ்சை மிகுந்திட பாடல் 2012-ல் வெளியான சாருலதா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: சுந்தர் சி. பாபு · பாடியவர்: Suchith Suresan
Vaanjay Mikunthida is a song from the 2012 Tamil film Charulatha, written by Madhan Karky, composed by Sundar C Babu and sung by Suchith Suresan.
- Movie Name
- Charulatha 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சாருலதா
- Music
- Sundar C Babu
- Year
- 2012
- Lyrics
- Madhan Karky
- Singers
- Suchith Suresan
Lyrics(Tamil)
ஆஞ்சை இடுகிறேன்
கொஞ்சம் பணிந்திடு - இனிவரும்
ஏல்வை முழுவதும்
சால்வை இவளெனத்
தோளில் அணிந்திடு
உனக்கென... உலகையே
உதறினேன் பார்த்திடு....
மாலை ரெண்டு மாற்றவில்லை
தாலி ஒன்றும் ஏற்றவில்லை
நீயும் நானும் ஒன்றாய் வாழ்கின்றோம்
ஊரைப் பார்க்கத் தோன்றவில்லை
நாளை மீதும் நாட்டம் இல்லை
அன்றில் போலே ஒன்றாய் வாழ்கின்றோம்
ரேகைகள் ரெண்டில் ரெக்கைகள் நெய்தோம்
பறக்க வானேறினோம்
பூமியைச் சுற்றி முடித்ததாலே
புதிய கோள் தேடி நீயும் நானும் புகுந்திட... (வாஞ்சை மிகுந்திட)
பாதை எங்கே போகுமென்றே
சாலைப் பூக்கள் கேட்பதில்லை
பூக்கள் போலே வாழ்க்கை கொள்வோமா?
பூவில் தோன்றும் வாசம் என்றும்
பாதை பார்த்துச் செல்வதில்லை
வாசம் போலே காற்றில் செல்வோமா?
உரிமை என்றே உடைமை என்றே
எனக்கு நீ தோன்றினாய்
இளமைக் காட்டின் செழுமை யாவும்
முழுமையாய் உந்தன் தலைமையில் திகழ்ந்திட...
(வாஞ்சை மிகுந்திட)
Vaanjay Mikunthida song FAQ
Who sang Vaanjay Mikunthida?
Vaanjay Mikunthida was sung by Suchith Suresan for the 2012 Tamil film Charulatha.
Who wrote the lyrics of Vaanjay Mikunthida?
The lyrics of Vaanjay Mikunthida were written by Madhan Karky.
Who composed the music for Vaanjay Mikunthida?
The music for Vaanjay Mikunthida was composed by Sundar C Babu.
Which movie is the song Vaanjay Mikunthida from?
Vaanjay Mikunthida is from the Tamil film Charulatha, released in 2012. The film has 3 songs on Tamilputhumai.
வாஞ்சை மிகுந்திட பாடலை பாடியவர் யார்?
வாஞ்சை மிகுந்திட பாடலை பாடியவர் Suchith Suresan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.