வாள் முனையின் சக்தியினால்
உலகை ஆளுவோம் – இதன்
வலிமையினால் பகையை வீழ்த்தி
வாகை சூடுவோம் வெற்றி வாகை சூடுவோம்
அரசாளும் சக்தி யாவும் எங்கள் வீரவாளுக்கே
இந்த ஆண்மையேது உலகினிலே
எழுதுகோலுக்கே ஏழை எழுதுகோலுக்கே
அரைநொடியில் ஆண்டியையும் அரசனாக்குவோம்
மக்கள் அடிமை வாழ்வைப் போக்கி
நாட்டின் விடுதி காண்போம்........(வாள்முனை)
எழுதுகோலின் சக்தியாலே
உலகை ஆண்டிடுவோம்
என்றும் அழிவில்லாத கலைகளினாலே
அறிவை வளர்த்திடுவோம் – மக்கள்
அறிவை வளர்த்திடுவோம்..
நாவசைந்தால் நாடகம் கவிக்காவியம் வளரும்
உயர் நாகரீகப் பண்பும் அன்பும் நாட்டிலே பெருகும்
நவலோக சொர்க்கபோகம் யாவும் சேரும் வாழ்வினிலே
எழுதுகோலின் சக்தியாலே..
கத்தியின் சக்தியைத் தெரியாமல்
வீணாக கத்தாதே போ போ போ
புத்தியின் சக்தியை அறியாமல்
தற்புகழ்ச்சி பேசாதே போ போ போ
சேரன் சோழன் பாண்டியன் வாழ்வு
சிறந்து ஒங்க ஜெயமளித்த கத்தி
சென்ற கால நிகழ்ச்சியும்
மக்கள் வாழ்வின் மகிமையும்
பொன் எழுத்தால் பொறித்துக் காட்டும் சக்தி
இணையாகும் கண்கள் ஒன்றை ஒன்று
எதிர்த்து மோதலாகுமா
இந்த உலகில் எந்த சக்தியும்
தனித்து வாழ முடியுமா
எந்நாளும் உங்கள் சேவையை
இந்நாட்டின் முக்கிய தேவையை
எழுது கோலும் வீரவாளும்
எந்த நாளும் உலகையாள
ஒன்று சேர்ந்து வாழ்க வாழ்கவே.......