எளியோர் மனம் படும் பாட்டிலே
எழும் ஓசையாம் தாலாட்டிலே
ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றாரே – தினம்
மாந்தரெல்லாம் மாநிலமேல் ஏங்குகின்றாரே (ஆண்ட)
வளர் பார்தனிலே யாவரும் பகவான் பெற்ற பேரே எனில்
பகைமையொடு பாகுபாட்டைப் படைத்தவர் யாரோ
தாழ்ந்தோருயர்ந்தோராக மக்கள் வாழுகின்றாரே
சிலர் தனவந்தர் பலர் தரித்திரராய்க் காணுகின்றாரே
இது யார் செயல் விதியா வினையா அறிந்து சொல்வீரே (ஆண்ட)
கோடானுகோடி உயிர்களுக்கொரு தந்தை என்றாலே
சிலர் கோட்டையில் பலர் குடிசையில் குடி இருப்பதெதாலே
கூன் குருடு நொண்டி செவிடர் ஊமை பிறப்பதெதாலே
நிறை குறைகளுக்கே இதுவரைக்கும் ஒரு முடிவு தெரியல
இது யார் செயல் விதியா வினையா அறிந்து சொல்வீரே (ஆண்ட)