திமிகிட திமிகிட வாத்ய மிருதங்கம்
ப்ருமானந்த ஹரே கஜானனா
தாண்டவ ந்ருத்ய ஹரே கஜானனா
பலபீமா பலபீமா அபாரதவகுண மகிமா ஜயஜய
பெண்ணை நம்பாதே மனிதா
கண்ணைக் காட்டும் பெண்ணால் வெகுபேர்
கஷ்டப்பட்டதைச் சொல்லுவேன் கேள்
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே –சந்தோப
சுந்தர்கள் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் கெட்டதும் ராவணன் கெட்டதும்
சந்தனு கெட்டதும் பெண்ணாலே.....(பெண்ணை)
கையால் தொட்டான் ராவணன் உயிரை விட்டான்
செய்யாத காரியத்தைச் செய்த துரியோதனனும்
சேர்ந்தவரும் மாண்டதந்த துரோபதையாலே
கூனியம்மா செய்த கலகம் தசரதனைக்
கொண்டு போச்சு தெய்வ உலகம்...
வாணிச்சியின் பிட்டுக்காக
மண் சுமக்க வந்த சிவன்
வாங்கினான் முது வீங்க
பாண்டியன் கைப் பிரம்பாலே (பெண்ணை)