ஆ....ஆஆ....ஆஆ......ஆஆ...ஓஓஒ.....
எட்டாத கிளையில் கிட்டாத கனிபோல்
இருப்பதும் சரிதானோ
என் காதல் மறப்பதும் சரிதானோ
நட்டாற்றில் கையை விட்டாரைப் போல
நடப்பதும் சரிதானோ
என்னை நீ மறப்பதும் சரிதானோ......
உடல் மண்ணோடு மறைந்தாலும்
உன்னை நான் மறந்திடுவேனோ
உன்னைப் பிரிந்திடுவேனோ
கண்ணோடு கண்கள் பேசிய பின்னே
ஜாதி மதமேது குலபேதம் நமக்கேது
வீண் சந்தேகம் நீ கொள்வதேனோ – நாம்
அன்புமிகும் காதலாலே
எந்த நாளும் ஒன்று சேர்ந்து
சந்தோஷமாக வாழ்வோம்........(எட்டாத)
பசும் பொன்னான மலரோடு மணமும்
பொருந்துதல் போல
புவியில் நாம் இனிமேலே
எந்நாளும் வாழ்வோம்
யாரும் நமக்கு எதிரே கிடையாது
யாரும் இணையே கிடையாது
துன்பம் நமக்கினி ஏது
நாம் அன்புமிகும் காதலாலே
எந்த நாளும் ஒன்று சேர்ந்து
சந்தோஷமாக வாழ்வோம்...(எட்டாத)