சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
இன்னமுதம் போல் பேசிடும் கண்ணா வா வா வா
இதயம் தனையறிந்து மனம் மகிழ்ந்து அருகிலே வா வா (சொன்ன)
தண்டை ஒலி இசையைக் கேட்டதில்லையோ வா வா வா
அந்தச் சத்தத்திலே போதை கொண்டதில்லையோ வா வா வா
கெண்டை நிகர் விழியைக் கண்டதில்லையோ வா வா வா
அந்தக் கிறுக்கிலே இன்பம் கொண்டதில்லையோ அருகிலே வா வா (சொன்ன)
இதய வீணையை மீட்டி விட்டாயே வா வா வா
அந்த இனிய நாதமென் உடலை வாட்டுதே வா வா வா
புதுப்புது அழகாய் தோற்றுகிறாயே வா வா வா
மது மலரை வண்டு மறப்பதுண்டோ அருகிலே வா வா (ஒண்ணா)