Tamil Songs lyrics · 2014
Thodu Vaanam lyrics from Anegan movie - அனேகன் திரைப்படத்திலிருந்து தொடு வானம் பாடல் வரிகள்
தொடு வானம் பாடல் 2014-ல் வெளியான அனேகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: ஹரிசரண்
Thodu Vaanam is a song from the 2014 Tamil film Anegan, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Haricharan.
- Movie Name
- Anegan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அனேகன்
- Music
- Harris Jayaraj
- Year
- 2014
- Lyrics
- Vairamuthu
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீளத்தில் எனை புதைகிறேன்
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீளத்தில் எ னை புதைகிறேன்
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனி துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே
காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினை தேடும் வேரினை போல பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே
சிறுபொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ
Thodu Vaanam song FAQ
Who sang Thodu Vaanam?
Thodu Vaanam was sung by Haricharan for the 2014 Tamil film Anegan.
Who wrote the lyrics of Thodu Vaanam?
The lyrics of Thodu Vaanam were written by Vairamuthu.
Who composed the music for Thodu Vaanam?
The music for Thodu Vaanam was composed by Harris Jayaraj.
Which movie is the song Thodu Vaanam from?
Thodu Vaanam is from the Tamil film Anegan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
தொடு வானம் பாடலை பாடியவர் யார்?
தொடு வானம் பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.