Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Aathadi Aathadi lyrics from Anegan movie - அனேகன் திரைப்படத்திலிருந்து ஆத்தாடி ஆத்தாடி பாடல் வரிகள்

ஆத்தாடி ஆத்தாடி பாடல் 2014-ல் வெளியான அனேகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: பவதாரிணி

Aathadi Aathadi is a song from the 2014 Tamil film Anegan, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Bhavatharani.

WhatsApp
Movie Name (in Tamil)
அனேகன்
Year
2014
Lyrics
Vairamuthu
Singers
Bhavatharani

Lyrics(Tamil)

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசைப் பட்டு பூத்திருக்கா வா

ஒன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப் பகலா காத்‌திருக்க வா

இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா

என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

ஆத்தாடி

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா

ஒன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும்
விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கு ஏது

நான் தரமான தங்கக்கட்டி
நீ தகரத்தில் கெட்டிப்பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்க
உன்ன போல ஆளு ஏது

ஆசையா இருந்தா கூட
மனம் மசியாது
ஆத்துல விழுந்தா கூட
நிழல் நனையாது

உள்ளுக்குள் உள்ள கிறுக்கு
உன்ன சும்மா விடாது

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பட்டு பூத்திருக்காளா

என் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்காளா

கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொரத்து தூள்பரத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா

புளி மூட்ட தூக்கி பாத்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இளஞ் சிரிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக் கயிறு ஆக்க போறேன்

இடுப்புல கயிறா கெடக்க
மனம் தயங்குதையா
கழுத்துல கயிறா வந்தா
நித்தமும் சொந்தம் அய்யா

விழியால் தொட்ட அழகே
இந்த ஆச மாறாதே

ஆத்தாடி ஆத்தாடி
செம்பருத்தி பூக்காரி
ஆசப்பபட்டு பூத்திருக்கா வா

உன் ராசாத்தி ராசாத்தி
ரங்கூனுக்கு ராசாத்தி
ராப் பகலா காத்திருக்க வா

இது முதல் முதலாய்
சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குறுகுறுப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா

என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயித்தில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா.

Aathadi Aathadi song FAQ

Who sang Aathadi Aathadi?

Aathadi Aathadi was sung by Bhavatharani for the 2014 Tamil film Anegan.

Who wrote the lyrics of Aathadi Aathadi?

The lyrics of Aathadi Aathadi were written by Vairamuthu.

Who composed the music for Aathadi Aathadi?

The music for Aathadi Aathadi was composed by Harris Jayaraj.

Which movie is the song Aathadi Aathadi from?

Aathadi Aathadi is from the Tamil film Anegan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

ஆத்தாடி ஆத்தாடி பாடலை பாடியவர் யார்?

ஆத்தாடி ஆத்தாடி பாடலை பாடியவர் பவதாரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அனேகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்