Tamil Songs lyrics · 2007
Thirumagane Thirumagane lyrics from Thirumagan movie - திருமகன் திரைப்படத்திலிருந்து திருமகனே திருமகனே பாடல் வரிகள்
திருமகனே திருமகனே பாடல் 2007-ல் வெளியான திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: சாதனா சர்கம்
Thirumagane Thirumagane is a song from the 2007 Tamil film Thirumagan, composed by Deva and sung by Sadhana Sargam.
- Movie Name
- Thirumagan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திருமகன்
- Music
- Deva
- Year
- 2007
- Singers
- Sadhana Sargam
Lyrics(Tamil)
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
என் உடலை மடி மடி ஏற்று
உன் விரலால் சுதி சுதி மீட்டு
என் நரம்பில் சுரம் சுரம் கூட்டு
உன் வீணை நான் தானே
காதல் என்பது என்ன
கண்ணிமை என்பது என்ன
பூப்பின் பொருள் தான் என்ன
என் பூவின் பொருள் என்ன
கண்ணோடு
நீர் வழிந்தோட
கண்ணீரில் மை வழிந்தோட
மையோடு உயிர் வழிந்தோட
வந்தாயே என் உயிர் மீள
கையோடு வளையாக
காலோடு கொலுசாக
மெய்யோடு உயிராக
சேர்வாயா
திருமகனே திருமகனே
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
தொடுதல் என்பது என்ன
ஆண் தொல்லை என்பது என்ன
செல்லக்கலவரம் என்ன
உயிர் சேரும் கலை என்ன
சேற்றோடு பூக்களும் உண்டு
பூவோடு சேருகள் இல்லை
என் தேகத்தில் ஓணங்கள் உண்டு
என் ஆசைக்கு ஓணங்கள் இல்லை
குறையான குடமொன்று கூத்தாடும் நிலை கண்டு
மழையாக நீ வந்து
நிறைவாயா
திருமகனே திருமகனே
என் கண்கள் கண்டாய்
கருமணிகள் கண்டாய்
என் பொன்மேனி முழுசாய் கண்டாய்
திருமகனே
என் உடலை மடி மடி ஏற்று
உன் விரலால் சுதி சுதி மீட்டு
என் நரம்பில் சுரம் சுரம் கூட்டு
உன் வீணை நான் தானே
Thirumagane Thirumagane song FAQ
Who sang Thirumagane Thirumagane?
Thirumagane Thirumagane was sung by Sadhana Sargam for the 2007 Tamil film Thirumagan.
Who composed the music for Thirumagane Thirumagane?
The music for Thirumagane Thirumagane was composed by Deva.
Which movie is the song Thirumagane Thirumagane from?
Thirumagane Thirumagane is from the Tamil film Thirumagan, released in 2007. The film has 5 songs on Tamilputhumai.
திருமகனே திருமகனே பாடலை பாடியவர் யார்?
திருமகனே திருமகனே பாடலை பாடியவர் சாதனா சர்கம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.