Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Tharaiyil Natakkuthu lyrics from Selva movie - செல்வா திரைப்படத்திலிருந்து தரையில் நடக்குது பாடல் வரிகள்

தரையில் நடக்குது பாடல் 1996-ல் வெளியான செல்வா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: Sirpi · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Tharaiyil Natakkuthu is a song from the 1996 Tamil film Selva, written by Vaali, composed by Sirpi and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
செல்வா
Music
Sirpi
Year
1996
Lyrics
Vaali

Lyrics(Tamil)

தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்

கொஞ்சம் நெறைய கொஞ்சம் படிச்சவ கொஞ்சம் லவ்வா

ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

உனையே நான் எடுத்து தினம் உடையாய் உடுத்துகிறேன்

ஏய் எனை நீ அணைப்பது போல் எண்ணி இரவை கடத்துகிறேன்

இங்கு தனியே நான் நடந்தாலே நிழல் தரையில் விழுவதில்லை

எந்தன் நிழலே நீ எனும் செய்தி எந்த நிலமும் அறிந்ததில்லை

எந்தன் உயிர்மூச்சே உன்னை அகன்றாலே நுரையீரல்கள் இறந்துவிடும்

கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டால் தூங்கக்கூடும்

ஹேய் தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

ஹோ உனக்குன் சேர்த்தல்லவா தினம் உணவை உண்ணுகிறேன்

எனக்கோர் முகவரியாய் இங்கு உன்னையே எண்ணுகிறேன்

கொட்டும் மழையில் நீ நனைந்தாலே ஜலதோஷம் எனக்கு வரும்

வெட்டவெளியில் நீ திறிந்தாலே இங்கு எனக்கு வேர்த்துவிடும்

உந்தன் விழியோரம் துளி நீர் வந்தாலும் இங்கு கண்ணுக்குள் தீ பிடிக்கும்

காதல் தீதான் பற்றிக்கொள்ளும் அம்மம்மா ஹோ

தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

உனக்கு பிடித்தது நான் தரும் போது எனக்கும் பசி அடங்கும்

கொஞ்சம் நெறைய கொஞ்சம் படிச்சவ கொஞ்சம் லவ்வா

தரையில் நடக்குது தாமிரபரணி

தழுவ துடிக்குது திருநெல்வேலி

எனக்கு பிடித்தது நீ தரும் போது உனக்கும் பசி அடங்கும்

Tharaiyil Natakkuthu song FAQ

Who sang Tharaiyil Natakkuthu?

Tharaiyil Natakkuthu was sung by S. P. Balasubramaniam for the 1996 Tamil film Selva.

Who wrote the lyrics of Tharaiyil Natakkuthu?

The lyrics of Tharaiyil Natakkuthu were written by Vaali.

Who composed the music for Tharaiyil Natakkuthu?

The music for Tharaiyil Natakkuthu was composed by Sirpi.

Which movie is the song Tharaiyil Natakkuthu from?

Tharaiyil Natakkuthu is from the Tamil film Selva, released in 1996. The film has 5 songs on Tamilputhumai.

தரையில் நடக்குது பாடலை பாடியவர் யார்?

தரையில் நடக்குது பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

செல்வா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்