Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Thai Madiyae lyrics from Red movie - ரெட் திரைப்படத்திலிருந்து தாய் மடியே உன்னை பாடல் வரிகள்

தாய் மடியே உன்னை பாடல் 2002-ல் வெளியான ரெட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: திப்பு

Thai Madiyae is a song from the 2002 Tamil film Red, written by Vairamuthu, composed by Deva and sung by Tippu.

WhatsApp
Movie Name
Red 🎬 Movie info
Movie Name (in Tamil)
ரெட்
Music
Deva
Year
2002
Lyrics
Vairamuthu
Singers
Tippu

Lyrics(Tamil)

தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்

விண்ணை இடிக்கும் தோள்கள்
மண்ணை அளக்கும் கால்கள்
அள்ளி கொடுத்த கைகள் அசைவிழந்ததென்ன
கனல்கள் தின்னும் கண்கள்
கனிந்து நிற்கும் இதழ்கள்
உதவி செய்யும் பார்வை
உயிர் குறைந்ததென்ன
பாரத போர்கள் முடிந்த பின்னாலும்
கொடுமைகள் இங்கே குறையவில்லை
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும்
சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லை
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்

படை நடத்தும் வீரன்
பசித்தவர்கள் தோழன்
பகைவருக்கும் நண்பன் படும் துயரம் என்ன
தாய் பாலாய் உண்ட ரத்தம்
தரை விழுந்ததென்ன
இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன
தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி தாமதமாக வருவதென்ன

தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்

Thai Madiyae song FAQ

Who sang Thai Madiyae?

Thai Madiyae was sung by Tippu for the 2002 Tamil film Red.

Who wrote the lyrics of Thai Madiyae?

The lyrics of Thai Madiyae were written by Vairamuthu.

Who composed the music for Thai Madiyae?

The music for Thai Madiyae was composed by Deva.

Which movie is the song Thai Madiyae from?

Thai Madiyae is from the Tamil film Red, released in 2002. The film has 8 songs on Tamilputhumai.

தாய் மடியே உன்னை பாடலை பாடியவர் யார்?

தாய் மடியே உன்னை பாடலை பாடியவர் திப்பு.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்