Tamil Songs lyrics · 1978
Thaalaattu lyrics from Achchani movie - அச்சாணி திரைப்படத்திலிருந்து தாலாட்டு பாடல் வரிகள்
தாலாட்டு பாடல் 1978-ல் வெளியான அச்சாணி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: பி. சுசீலா
Thaalaattu is a song from the 1978 Tamil film Achchani, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by P. Susheela.
- Movie Name
- Achchani 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அச்சாணி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1978
- Lyrics
- Vaali
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பிள்ளை உண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு
பாராட்டு…..
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
தாலாட்டு…..
நான் படைத்த தேன் மழலை
நலமுடன் வளர்ந்து வர வேண்டும்
வான் படைத்த முழு நிலவாய்
வாழ்வில் வெளிச்சம் தர வேண்டும்
மான் படைத்த மைவிழியே
இன்னொரு பிள்ளை பெறவேண்டும்
ஒன்றோ ரெண்டோ பிள்ளை
என்றால் இன்பம் கொள்ளை
மெய் சிலிர்த்திட மகன் படிப்பது
மழலை என்ற மந்திரம்
யாழிசையிலும் ஏழிசையிலும்
இல்லை இந்த மோகனம்
தாலாட்டு…..
பிள்ளை உண்டு தாலாட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
தாலாட்டு…..
வாழ்க்கையிலே வழக்குகளை
என் மகன் நாளை தீர்த்து வைப்பான்
வருத்தமுரும் மானிடர்க்கு
மருத்துவம் செய்து மகிழ்ந்திருப்பான்
நாம் வளர்த்த கனவுகளை
நனவாய் நிஜமாய் ஆக்கி வைப்பான்
கண்ணன் வண்ணம் கண்டு
துள்ளும் உள்ளம் ரெண்டு…
தென் பொதிகையில் நின்றுலவிடும்
தென்றல் போல வந்தவன்
செந்தமிழினில் சிந்திசைக்க
சந்தம் கொண்டு தந்தவன்
பாராட்டு…..
அன்னை என்னை பாராட்டு
உந்தன் பேர் சொல்ல
பிள்ளை பெற்றெடுத்தேன்
அந்த பாக்கியம் செய்து பேரடுத்தேன்
Thaalaattu song FAQ
Who sang Thaalaattu?
Thaalaattu was sung by P. Susheela for the 1978 Tamil film Achchani.
Who wrote the lyrics of Thaalaattu?
The lyrics of Thaalaattu were written by Vaali.
Who composed the music for Thaalaattu?
The music for Thaalaattu was composed by Ilaiyaraaja.
Which movie is the song Thaalaattu from?
Thaalaattu is from the Tamil film Achchani, released in 1978. The film has 4 songs on Tamilputhumai.
தாலாட்டு பாடலை பாடியவர் யார்?
தாலாட்டு பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.