Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Sha La La lyrics from Ghilli movie - கில்லி திரைப்படத்திலிருந்து ஷா லா லா பாடல் வரிகள்

ஷா லா லா பாடல் 2004-ல் வெளியான கில்லி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: Sunidhi Chauhan

Sha La La is a song from the 2004 Tamil film Ghilli, written by Pa. Vijay, composed by Vidyasagar and sung by Sunidhi Chauhan.

WhatsApp
Movie Name (in Tamil)
கில்லி
Year
2004
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா
செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி
கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா

மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா
நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன்
கால்களின் விரல்களே கொலுசா
பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி
நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி...
இடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் ரயிலே சொல்
நாட்டியமா ஹேய் நாட்டியமா

தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே
மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்
ஹைதர் கால வீரந்தான் குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ
கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா
செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி
கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ

Sha La La song FAQ

Who sang Sha La La?

Sha La La was sung by Sunidhi Chauhan for the 2004 Tamil film Ghilli.

Who wrote the lyrics of Sha La La?

The lyrics of Sha La La were written by Pa. Vijay.

Who composed the music for Sha La La?

The music for Sha La La was composed by Vidyasagar.

Which movie is the song Sha La La from?

Sha La La is from the Tamil film Ghilli, released in 2004. The film has 6 songs on Tamilputhumai.

ஷா லா லா பாடலை பாடியவர் யார்?

ஷா லா லா பாடலை பாடியவர் Sunidhi Chauhan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கில்லி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்