நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று
கோல மேனிதான் எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூ மரம்
இனி தீராதோ காதல் தாகம்…(நினைத்த)
நூறு நூறு ஆண்கள் உண்டு பார்க்கிறேன்
இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன்
வானில் நூறு கோடி உண்டு தாரகை
ஒளி வீசும் நிலவு போல எந்தன் காரிகை
ஆகாயம் காணாத தேவன்
ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா.(நினைத்த)
பெண்மை என்ற சொல்லுக்கேற்ற மோகனம்
அவள் பிரம்மன் இந்த உலகுக்கீன்ற சீதனம்
சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா
அட தென்றல் மோதி இமயம் என்ன சரியுமா
வீணாக வாய் வார்த்தை ஏனோ
வேறாரும் என் அன்பை நெருங்க முடியுமா (நினைத்த)