சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில்
வானம் இன்று தான் தீண்டுதே காலில்
உன் முகம் பார்த்தது என் வனம் பூத்தது
இரவும் பகலும் வானில் அழகு நடை போடும் (சின்ன)
சுகமான ஒரு வேதனை இது என்ன புது சோதனை
விழியில் தெரியும் ஏதோ புதிய உலகம் ஓஹோஹோ
மணம் வீசும் சிறு பூக்களே இனி யாவும் சுக நாட்களே
இளைய நிலவே நீதான் உயிரின் உறவே
வானம்பாடி நம்மைத்தான் வாழ்த்திப் பாடும்
காலம் தோறும் நீங்காமல் காதல் வாழும்
உனை அணைக்கும் பொழுது மனதில் இனிக்குமே
உனது நினைவு இருக்கும் வரைக்கும் உயிர் வாழ்வேன் (சின்ன)
உறங்காத விழி வேண்டினேன்
இமைக்காமல் உனைத் தீண்டினேன்
இசையின் மகளே நீதான் எனது பகலே ஓஹோஹோ
உனை சேரும் வரம் கேட்கிறேன்
உனக்காக உயிர் வாழ்கிறேன்
நெருங்கிப் பழகும் நீ தான் எனது உலகும்
நீயும் வந்தால் தீ கூட பூப் பூக்கும்
தூரம் சென்றால் தேன் கூட வேம்பாகும்
உனைத் தொடரும் நிழலும் எனது உருவமே
சிறகை விரித்து நிலவைக் கடந்து சிரிப்பேனே..(சின்ன)