சிரித்தாளே சின்ன மின்மினி
ஜொலிக்காதோ வண்ண பொன்மணி
தெளிக்கும் முத்து ரத்தினம் முத்து ரத்தினம்
நடக்கும் வண்ணச் சித்திரம் வண்ணச் சித்திரம்(சிரித்தாளே)
புதிய வழி கால்கள் போகலாம்
இனிய கதை கண்கள் பேசலாம் { வேலி இல்லை }
வெற்றி வரும் பாதை போகலாம்
சுற்றி வரும் பறவை ஆகலாம்{ தோழி இல்லை }
கட்டுக் காவல் ஏது என் உள்ளம் ஏற்காது
போகும் திசை என்ன நதி வெள்ளம் பார்க்காது..(சிரித்தாளே)
ஹே கவலை என்னும் வார்த்தை என்பதே
இளைய மகள் ஏட்டில் இல்லையே
அடியெடுத்து ஆடி வந்தது அமுத இசை பாடி வந்தது
கண்ணீர் என்றால் என்ன அதைக் கண்டேன் இல்லை
பன்னீர் வெள்ளம் மீது நீராடும் முல்லை..(சிரித்தாளே)