பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா
பெண் : நான் வாழ்ந்ததும் உன்னாலே
நிலை தாழ்ந்ததும் உன்னாலே
கண்ணீரினில் ஆடும்
வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே
பெண் : நான் வாழ்ந்ததும் உன்னாலே
நிலை தாழ்ந்ததும் உன்னாலே
கண்ணீரினில் ஆடும்
வாழ்வினில் வேதனை சூழ்ந்ததும் உன்னாலே
பெண் : விண்வெளி மீதே வெண்ணிலவை நீ
விளங்கவும் வைத்தாயே……
விளங்கவும் வைத்தாயே……
விண்வெளி மீதே வெண்ணிலவை நீ
விளங்கவும் வைத்தாயே……
விளங்கவும் வைத்தாயே……
பெண் : ஒளி விளங்கிடும் வேளை பனித்திரையாலே
பாதையை மறைத்தாயே
வாழ்வெனும் ஓடம் ஆடிடும் வேளையில்
மூழ்கவும் செய்தாயே
பெண் : நான் வாழ்ந்ததும் உன்னாலே
பெண் : கவலையினாலே வாடிய மலரை
கைகளில் எடுத்தாயே…….
கைகளில் எடுத்தாயே…….ஏ….
மலர் புதுமணம் வீசி மகிழ்ந்திடும் வேளை
பூமியில் எறிந்தாயே…..ஏ….
சேவையில் நான் வாழ்ந்திருந்தேன் எனை
சோதனை செய்தாயே…….
பெண் : என்னுயிர் தெய்வம் எனை மறந்தாலும்
நான் உனை மறவேனே…..
நான் உனை மறவேனே…..
இரு கண்களைக் காக்கும் இமைகளைப் போலே
காத்திருப்பேன் மகனே….
என் ஆசைகள் யாவும் நீயென நான்
இனி வாழ்வதும் உன்னாலே…..
பெண் : நான் வாழ்ந்ததும் உன்னாலே