பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா
ஆண் : இடை கையிரெண்டில் ஆடும்…
சிறு கண்ணிரெண்டும் மூடும்…
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே…
காதல் கீதம் பாடுமே…
பெண் : விழி மூடும் போதும் பார்க்கும்..
இதழ் தூங்கும் போதும் பேசும் ……
இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே….
ஆசை கீதம் பாடுமே…
பெண் : அந்தி நேரம் வந்தாலே
காதல் வேகம் உண்டாகும்
பெற்றத் தாயை கண்ட போதும்
நெஞ்சில் கோபம் உண்டாகும்
பெண் : அந்தி நேரம் வந்தாலே
காதல் வேகம் உண்டாகும்
பெற்றத் தாயை கண்ட போதும்
நெஞ்சில் கோபம் உண்டாகும்
ஆண் : பிறர் பார்த்துவிட்டாலும்
பெண்மை நாணம் கொண்டாடும்
அதை பார்க்க பார்க்க
காளை நெஞ்சில் போதை உண்டாகும்
அதை பார்க்க பார்க்க
காளை நெஞ்சில் போதை உண்டாகும்
ஆண் : இடை கையிரெண்டில் ஆடும்…
சிறு கண்ணிரெண்டும் மூடும்…
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே…
காதல் கீதம் பாடுமே…
பெண் : சிறு பிரிவுமில்லாமல்
இன்ப சிறகுகளாலே
ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம்
பறவைகள் போலே
பெண் : சிறு பிரிவுமில்லாமல்
இன்ப சிறகுகளாலே
ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம்
பறவைகள் போலே
ஆண் : ஒரு பேதமில்லாமல்
சேர்ந்த காதலினாலே
நாம் உறவுக் கொண்டு
உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே
நாம் உறவுக் கொண்டு
உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே
இருவர் : இனி காலம் எங்கள் காலம்..
சுக வாழ்வு எங்கள் வாழ்வு
உயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே…
தென்றல் கீதம் பாடுமே..
ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..
ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்….