Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Muthu Nilave lyrics from Time movie - டைம் திரைப்படத்திலிருந்து முத்து நிலவே தித்திக்கின்றதே பாடல் வரிகள்

முத்து நிலவே தித்திக்கின்றதே பாடல் 1999-ல் வெளியான டைம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: இளையராஜா · பாடியவர்: கோபிகா பூர்ணிமா

Muthu Nilave is a song from the 1999 Tamil film Time, written by Palani Barathi, composed by Ilaiyaraaja and sung by Gopika Poornima.

WhatsApp
Movie Name (in Tamil)
டைம்
Year
1999

Lyrics(Tamil)

முத்து நிலவே யயயாஹ்..தித்திக்கின்றதே
நட்சத்திரமே யயயாஹ் கொட்டுகின்றதே
காற்றிலே கைகளால் ஓவியம் வரைகிறேன்
தேவதை நேரில் வந்தாளே.... ஹோய்..(முத்து)

ஹேய் சிரிக்குதே சிரிக்கும் மின்னல்
ஹேய் பறிக்குதே துடிக்கும் நெஞ்சை ஹே ஹேய்..
ஹேய் துடிக்குதே துடிக்கும் நெஞ்சம்
ஹேய் குளிக்குதே கொதிக்கும் ஆற்றில் ஹே ஹேய்...

கார்முகில் வண்ணன் குழலோசை கேட்கிறது
மாலே மணிவண்ணா..
ராதையின் உள்ளம் மணமாலை கோர்க்கிறது
மாலே மணிவண்ணா

வேய்ங்குழல் தேனோசை ஓசையில் ஓராசை
ஆசையில் பெண் கன்னம் பூத்ததே
என் நெஞ்சில் தில்லானா

என் நெஞ்சத்தில் நானா
முத்துமணி முத்துகளை கண்டுகொண்டேன்
ரத்தினங்கள் சிந்தியது நெஞ்சுக்குள்ளே
அங்குமிங்கும் எங்கெங்கும் நீதானா

தத்தித் தத்தி தங்க முகம் பச்சைக்கிளி
இறக்கைகளை தந்துவிடும் சொன்னபடி
நானந்த ஓவியம் கண்டு சிலையாய் ஆகிறேன்
வானவில்லின் வண்ணம் கண்டு
வெறும் மழையாய் ஆகிறேன்

நினைவிலே வாழ்ந்தவள் நேரிலே தோன்றினாள்
என்னுயிர் தீபத்தை விழியினால் தூண்டினாள்
கண்டு கொண்டேனே காலம் காலம் வென்றேனே
முத்து நிலவே யயயாஹ்..தித்திக்கின்றதே

என் பாதி என்பேனே சித்திரத்தில்
சிக்கியது உன் அழகு
தூண்டிலுக்கு தப்பியது கண்ணழகு
உன்னை விட்டு இங்கே நான் வாழ்வேனா

ரெண்டில் ஒன்று பக்கம் வந்து சொல்லிவிடு
தத்தளிக்கும் என் மனதை அள்ளி எடு
பூவுக்குள்ளே பூவுக்குள்ளே நாமும் வாழ்வோமா
ஆள் இல்லா ஆளே இல்லா தேசம் போவோமா

காதலை உண்ணலாம் காதலை உடுத்தலாம்
காதலை வாழலாம் காதலை ஆளலாம்
வேண்டும் என் அன்பே
போதும் போதும் என் என்பே....(முத்து)

Muthu Nilave song FAQ

Who sang Muthu Nilave?

Muthu Nilave was sung by Gopika Poornima for the 1999 Tamil film Time.

Who wrote the lyrics of Muthu Nilave?

The lyrics of Muthu Nilave were written by Palani Barathi.

Who composed the music for Muthu Nilave?

The music for Muthu Nilave was composed by Ilaiyaraaja.

Which movie is the song Muthu Nilave from?

Muthu Nilave is from the Tamil film Time, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.

முத்து நிலவே தித்திக்கின்றதே பாடலை பாடியவர் யார்?

முத்து நிலவே தித்திக்கின்றதே பாடலை பாடியவர் கோபிகா பூர்ணிமா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டைம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்