Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Mottu Onru lyrics from Kushi movie - குஷி திரைப்படத்திலிருந்து யார் சொல்வதோ பாடல் வரிகள்

யார் சொல்வதோ பாடல் 2000-ல் வெளியான குஷி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: ஹரிசரண்

Mottu Onru is a song from the 2000 Tamil film Kushi, written by Vairamuthu, composed by Deva and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
குஷி
Music
Deva
Year
2000
Lyrics
Vairamuthu
Singers
Haricharan

Lyrics(Tamil)

யார் சொல்வதோ யார் சொல்வதோ
யார் சொல்வதோ யார் சொல்வதோ

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா

கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

மேகம் என்பது அட மழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்

காதல் என்பது இரு மன முடிச்சு
கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்

மேகங்கள் முட்டிக்கொள்வதாலே
சண்டை என்று பொருள் இல்லை

தேகங்கள் முட்டிக்கொள்வதாலே
ஊடல் என்று பொருள் இல்லை

இதழ்கள் பொய் சொல்லும்
இதயம் மெய் சொல்லும்
தெரியாதா உன்மை தெரியாதா

காதல் விதை போல மௌனம் மண் போல
முளைக்காதா மண்ணை துளைக்காதா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
உயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும்

ஹோ மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்

உள்ளத்தை மூடி மூடி தைத்தால்
கலை இல்லை காதல் இல்லை

உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்
பயம் இல்லை பாரம் இல்லை

நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா

கமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா கதிர் திறக்காதா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா

கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

Mottu Onru song FAQ

Who sang Mottu Onru?

Mottu Onru was sung by Haricharan for the 2000 Tamil film Kushi.

Who wrote the lyrics of Mottu Onru?

The lyrics of Mottu Onru were written by Vairamuthu.

Who composed the music for Mottu Onru?

The music for Mottu Onru was composed by Deva.

Which movie is the song Mottu Onru from?

Mottu Onru is from the Tamil film Kushi, released in 2000. The film has 7 songs on Tamilputhumai.

யார் சொல்வதோ பாடலை பாடியவர் யார்?

யார் சொல்வதோ பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குஷி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்