Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1976

Kannan Oru lyrics from Bhadrakali movie - பத்திரகாளி திரைப்படத்திலிருந்து கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் வரிகள்

கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் 1976-ல் வெளியான பத்திரகாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Kannan Oru is a song from the 1976 Tamil film Bhadrakali, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by K. J. Yesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
பத்திரகாளி
Year
1976
Lyrics
Vaali

Lyrics(Tamil)

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை


உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி

வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி

வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள்படக்கூடம் என்று
போட்டு ஒன்று வைகட்டுமா



கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை

கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை

கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ

மைவிழியே தாலேலோ

மாதவனே தாலேலோ
ஆராரிரோ

ஆராரிரோ

ஆராரிரோ

ஆராரிரோ

Kannan Oru song FAQ

Who sang Kannan Oru?

Kannan Oru was sung by K. J. Yesudas for the 1976 Tamil film Bhadrakali.

Who wrote the lyrics of Kannan Oru?

The lyrics of Kannan Oru were written by Vaali.

Who composed the music for Kannan Oru?

The music for Kannan Oru was composed by Ilaiyaraaja.

Which movie is the song Kannan Oru from?

Kannan Oru is from the Tamil film Bhadrakali, released in 1976. The film has 5 songs on Tamilputhumai.

கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடலை பாடியவர் யார்?

கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பத்திரகாளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்