Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Idhuthaanaa lyrics from Saamy movie - சாமி திரைப்படத்திலிருந்து இதுதானா இதுதானா பாடல் வரிகள்

இதுதானா இதுதானா பாடல் 2003-ல் வெளியான சாமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: K. S. Chithra

Idhuthaanaa is a song from the 2003 Tamil film Saamy, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by K. S. Chithra.

WhatsApp
Movie Name (in Tamil)
சாமி
Year
2003
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
வெக்கங்களும் வெட்கப்பட்டு பட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)

Idhuthaanaa song FAQ

Who sang Idhuthaanaa?

Idhuthaanaa was sung by K. S. Chithra for the 2003 Tamil film Saamy.

Who wrote the lyrics of Idhuthaanaa?

The lyrics of Idhuthaanaa were written by Thamarai.

Who composed the music for Idhuthaanaa?

The music for Idhuthaanaa was composed by Harris Jayaraj.

Which movie is the song Idhuthaanaa from?

Idhuthaanaa is from the Tamil film Saamy, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.

இதுதானா இதுதானா பாடலை பாடியவர் யார்?

இதுதானா இதுதானா பாடலை பாடியவர் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சாமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்