பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஷாஷா திருப்பதி
இசையமைப்பாளர் : சித்து குமார்
பெண் : இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் காண துடித்த நாளோ
இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் சேர துடித்த நாளோ
ஆண் : விழி ஆதில் விழுவேனா
இனி உன்னை விடுவேனா
விரலுடன் அட விரல் கடத்திய
காதல மறப்பேனா
உடன் வருவேனா
உயிர் தொடுவேனா
இலை நுனியில ஒரு துளியென
தவிக்கிறேன் சரிதானா
ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்
அருகில் இருக்கணும்
பெண் : ஆ….அருகில் இருக்க நீ
இறுக்கி பிடிக்கணும்
உனக்காய் மறுகணமும்
எனக்குள் உருகணும் உயிரே….ஹ்ம்ம்….
ஆண் : உன் மனசு
அடம் பிடிக்கிற கொழந்தை
அதை என் இடுப்பில்
நான் சுமந்திட ஆசை
நீ சிரிக்க
அட எதுக்கு நீ மறந்த
அது நான் கேட்க்கும் மெல்லிசை…..ஆஅ….
ஆண் : உனக்கென வாழ
உயிர் ஏங்குதே
உன் நினைவொன்றே
என்னை தாங்குதே
பெண் : எதிலும் நீயடா
எதுவும் நீயடா
போடா….ஓஒ….ஓ….
பெண் : இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் காண துடித்த நாளோ
இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் சேர துடித்த நாளோ
ஆண் : நினைக்கும் நொடி எல்லாம்
அருகில் இருக்கணும்
பெண் : அருகில் இருக்க நீ
இறுக்கி பிடிக்கணும்