பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
ஆண் : ஆஹ்……ஆஹ்……ஆஹ்…..
பெண் : ஏழிசை கீதமே…..எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக…..
நான்தான்…..காவிய வீணையில்
சுவரங்களை மீட்டுவேன்
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
பெண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
பெண் : ஞான கோவில் கதவு திறந்து விட
பாடல் நூறு இசையில் கலந்து வர
வாடை காற்றில் வசந்த மனமும் வர
வண்ண சோலை மாலை மயக்கம் தர
நயனம் சிவப்பதென்ன நடனம் புரிவதென்ன
நினைவு கொதிப்பதென்ன
பருவம் கொடுத்த வரமோ….எல்லாம்
நீ தந்த என்னங்க நீ தந்த வண்ணங்கள்
இசையே இசையே…..
பெண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
பெண் : தேவன் தந்த குரலில் நயம் இருக்க
தென்றல் தந்த குளுமை நிறைந்திருக்க
பாட பாட புதுமை விளைந்திருக்க
பாடல் தோறும் இனிமை கலந்திருக்க
இசையின் முழக்கம் இது இதய மயக்கம் இது
இளைய தலைமுறையின் புதிய விளக்கமிதுவோ
ஏதோ
ஓசைகள் உண்டாக ஆசைகள் கொண்டாடும்
மனமே மனமே…..
பெண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே
பெண் : ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே