Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1993

Enveetu Thotthil lyrics from Gentleman movie - ஜென்டில் மேன் திரைப்படத்திலிருந்து என் வீட்டு தோட்டத்தில் பாடல் வரிகள்

என் வீட்டு தோட்டத்தில் பாடல் 1993-ல் வெளியான ஜென்டில் மேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Enveetu Thotthil is a song from the 1993 Tamil film Gentleman, written by Vairamuthu and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Year
1993
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே

பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டு பார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டு பார்
என் நெஞ்சை சொல்லுமே

***

ஆண் : வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய் பூட்டு சட்டமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது

பெண் : வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது

ஆண் : ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது

பெண் : ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது

ஆண் : ஆசை துடிக்கின்றதோ

ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பேர் சொல்லுமே

{ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்

பெண் : ம்...ஹு....ம்....ஹு...ம்....} (Over lap)

ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பேர் சொல்லுமே

***

பெண் : சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே

ஆண் : சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

பெண் : எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது

ஆண் : எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது

பெண் : ம்..ஹு..ம் அனுபவமோ

ஆண் : அஹ்ஹஹா...

பெண் : என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே

{ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்

ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்

பெண் : ம்...ஹு....ம்....ஹு...ம்...} (Over lap)

இருவர் : என் பேர் சொல்லுமே

Enveetu Thotthil song FAQ

Who sang Enveetu Thotthil?

Enveetu Thotthil was sung by S. P. Balasubramaniam for the 1993 Tamil film Gentleman.

Who wrote the lyrics of Enveetu Thotthil?

The lyrics of Enveetu Thotthil were written by Vairamuthu.

Which movie is the song Enveetu Thotthil from?

Enveetu Thotthil is from the Tamil film Gentleman, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.

என் வீட்டு தோட்டத்தில் பாடலை பாடியவர் யார்?

என் வீட்டு தோட்டத்தில் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜென்டில் மேன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்