Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 1977

Angum Ingum lyrics from Avargal movie - அவர்கள் திரைப்படத்திலிருந்து அங்கும் இங்கும் பாடல் வரிகள்

அங்கும் இங்கும் பாடல் 1977-ல் வெளியான அவர்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Angum Ingum is a song from the 1977 Tamil film Avargal, written by Kannadasan and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
அவர்கள்
Year
1977
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ


கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல
கனியும் மென்மைக் கண்டாள் (இசை)
கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல
கனியும் மென்மைக் கண்டாள்
கதை எழுதி பழகி விட்டாள்
முடிக்க மட்டும் தெரியவில்லை
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்


கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று
கூறிப் பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதைகளை
விதிப் புகுந்தே திருத்துதம்மா
அவள் எழுதும் கவிதைகளை
விதிப் புகுந்தே திருத்துதம்மா

அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்


சொந்தம் ஒன்று பந்தம் ஒன்று
வெள்ளை உள்ள பிள்ளை ஒன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையோ பழங்கதையோ
விடுகதையோ எது இன்று

அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
அங்கும் இங்கும் பாதையுண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ

Angum Ingum song FAQ

Who sang Angum Ingum?

Angum Ingum was sung by S. P. Balasubramaniam for the 1977 Tamil film Avargal.

Who wrote the lyrics of Angum Ingum?

The lyrics of Angum Ingum were written by Kannadasan.

Which movie is the song Angum Ingum from?

Angum Ingum is from the Tamil film Avargal, released in 1977. The film has 7 songs on Tamilputhumai.

அங்கும் இங்கும் பாடலை பாடியவர் யார்?

அங்கும் இங்கும் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவர்கள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்