Tamil Songs lyrics · 2000
Adi Kadhal Enbathu lyrics from Ennavale movie - என்னவளே திரைப்படத்திலிருந்து அடி காதல் என்பது பாடல் வரிகள்
அடி காதல் என்பது பாடல் 2000-ல் வெளியான என்னவளே திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: ஹரிசரண்
Adi Kadhal Enbathu is a song from the 2000 Tamil film Ennavale, composed by S. A. Rajkumar and sung by Haricharan.
- Movie Name
- Ennavale 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- என்னவளே
- Music
- S. A. Rajkumar
- Year
- 2000
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்
அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு
வெளியே குதித்துவிடும்
கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும்
காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே
பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சர சர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே
ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா
இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்
கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா
கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
காதல் மிருகம் என்பது
ரத்தம் சதையா கேட்குது
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது
மீண்டும் மிருகம் தூங்கவே
காடா மலையா கேட்குது
இடுப்பில் உன் சேலை கொண்ட
மடிப்பொன்று கேட்குது
மிருகம் தவிக்குதே வழி சொல்லவா
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா
மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க
அது தூங்கி போகும் அல்லவா
கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்
அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்
அந்த வேளை வந்ததும்
விஸ்வருபம் கொண்டு வெளியே குதித்துவிடும்
கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா
Adi Kadhal Enbathu song FAQ
Who sang Adi Kadhal Enbathu?
Adi Kadhal Enbathu was sung by Haricharan for the 2000 Tamil film Ennavale.
Who composed the music for Adi Kadhal Enbathu?
The music for Adi Kadhal Enbathu was composed by S. A. Rajkumar.
Which movie is the song Adi Kadhal Enbathu from?
Adi Kadhal Enbathu is from the Tamil film Ennavale, released in 2000. The film has 5 songs on Tamilputhumai.
அடி காதல் என்பது பாடலை பாடியவர் யார்?
அடி காதல் என்பது பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.