Skip to content

Popular

A

Artist profile

Anitha ShaiqTamil Playback Singer – Song Lyrics & Movies

அனிதா ஷேக்

About Anitha Shaiq

பிறப்பு · Born
, Thiruvananthapuram

அனிதா சைக் (Anitha Shaiq), பெரும்பாலும் 'அனிதா எஸ்' என்று குறிப்பிடப்படுபவர், ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி, சூஃபி பாடகி, இசையமைப்பாளர் ஆவார். இவர் இந்தியச் செவ்வியல் இசை, சூஃபி, கஜல், நாட்டுப்புற இசை, பாப்பிசை ஆகிய வகைகளில் பாடுபவர். மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, பஞ்சாபி, தமிழ் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்படத் துறையில் தனது 18 ஆண்டுகாலப் பயணத்தில், 12 வெவ்வேறு மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் படிக்க ›

அனிதா ஷைக், உயர்நிலைப் பள்ளி இசை ஆசிரியையான சிராஜுனிசா பேகம் மற்றும் சேக் இப்ராகிம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் அரசு மகளிர் கல்லூரியில் இசையை முதன்மைப் பாடமாகப் பயின்று பட்டம் பெற்றார். இவர் இந்துசுதானி, சூஃபி, கருநாடக இசை, மேற்கத்திய இசை முறைகளை முறையாகப் பயின்றுள்ளார்.

லெனின் ராஜேந்திரன் இயக்கிய 'கிராஸ்ரோட்' (Crossroad) திரைப்படத்திற்காக 'மேலகே பொன்னல்' (Melake Ponnal) என்ற பாடலை ஷைக் இசையமைத்தார்.

ஸ்ரீ வித்யாசாகர் இசையமைப்பில் 2007-ஆம் ஆண்டில் வெளியான ஒரு வெற்றிப் பாடலின் மூலம் ஷைக் தனது பின்னணிப் பாடகர் பணியைத் தொடங்கினார். இவர் மலையாளம், தமிழ், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பல திரைப்படங்களுக்குப் பாடல்களைப் பாடியுள்ளார். .

'சத்ரங்கி' (Satrangee) என்ற இசைத்தொகுப்பினை அனிதா ஷைக் இசையமைத்துப் பாடியுள்ளார். இதனை 'ஈஸ்ட் கோஸ்ட்' நிறுவனம் தயாரித்தது. மீரா, மிர்சா காலிப், புல்லே ஷா, அமீர் குஸ்ரு போன்ற ஜாம்பவான்கள் எழுதிய ஏழு பாடல்களை கொண்டுள்ளது. இந்த இசைத்தொகுப்பு 2015-ஆம் ஆண்டு சனவரி 20-ஆம் தேதி பிரபல இந்திய சூஃபி பாடகர் கைலாஷ் கெரால் வெளியிடப்பட்டது.

அனிதா இந்தியா முழுவதும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், கத்தார், ஐரோப்பா ஆகிய இடங்களில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

Anitha Shaiq, often credited as Anitha. S is an Indian playback singer, Sufi singer and music composer. She performs Indian classical, sufi, Ghazal, folk and pop music, having sung in Malayalam, Kannada, Telugu, Oriya, Punjabi, and Tamil languages. In her 18 years in the film industry, she has recorded songs for films in 12 different languages.

Read full biography ›

Anitha Shaiq was born to Sirajuniza Begum, a secondary school music teacher, and Sheikh Ebrahim. She graduated from the Government College for Women, majoring in music. She has studied Hindustani, Sufi, Carnatic, and Western music.

Shaiq composed the song "Melake Ponnal" for the film Crossroad directed by Lenin Rajendran.

Shaiq began her play back singing in 2007 with the hit song of that year composed by Sree. Vidyasagar. She has sung for many Malayalam, Tamil, Hindi and Kannada movies.

Anitha has performed live concerts all over India, UAE, Bahrain, Qatar, Europe.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Anitha Shaiq · Singers songs · 1

Anitha Shaiq Movies List · திரைப்படங்கள் · 1

  1. Thulam 2018 ♪ 6

    Thulam

    துலாம்

Worked with Anitha Shaiq