Skip to content

Popular

A

Artist profile

Aditya GadhviTamil Playback Singer – Song Lyrics & Movies

ஆதித்யா கத்வி

About Aditya Gadhvi

பிறப்பு · Born
3 Apr 1994, Surendranagar

ஆதித்யா கத்வி (Aditya Gadhvi) என்பவர் இந்தியாவில் அமைந்துள்ள குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பின்னணிப் பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் பல்வேறு இந்திய மொழிகளில், ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் குசராத்தித் திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைத்துள்ளார். மேலும் பல தனிப்பாடல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது பாடல்களில் 'கலாசி' 'ரங் மோர்லா' 'குஜராத் டைட்டன்சு' அணியின் கீதமான 'ஆவா தே' ஆகியன குறிப்பிடத்தகுந்தனவாகும்.

மேலும் படிக்க ›

கத்வி, குசராத்து மாநிலத்தில், ஒரு குசராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை யோகேசு கத்வி ஆவார். இவர் குசராத்தி மற்றும் இந்தி மொழிகளைச் சரளமாகப் பேச தெரிந்தவராவார்.

இவர், குசராத்தி நாட்டுப்புற மற்றும் சூபி இசைப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 2014-ஆம் ஆண்டில், காமசூத்ரா 3 டி திரைப்படத்தில் கத்வி பாடிய இரண்டு பாடல்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தன. மேலும், குசராத் தொலைக்காட்சியில் அதிகபட்ச பார்வையாளர் மதிப்பீட்டைப் பெற்ற நிகழ்ச்சியான லோக் காயாக் குசராத்து என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது 18-வது வயதிலேயே வெற்றி பெற்றார். லோக் காயாக் குசராத்து நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கத்வி குசராத்து மாநிலம் முழுவதும் மட்டுமின்றி, ஆங்காங்கிலும் குசராத்தி நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். சனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், குசராத் மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் இவர் பின்னணிக் குரல் கொடுத்தார். இந்த அணிவகுப்பு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆயிரக்கணக்கான பிற விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. துபாய், வதோதரா போன்ற நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர். ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சிகளில், பின்னணிப் பாடகராக இணைந்து இவர் பாடியுள்ளார். பாலிவுட் திரைப்படமான லெகர் கம் தீவானே தில் இல் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து கத்வி பணியாற்றியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரின் போது, ​​நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக, குசராத் டைட்டன்ஸ் அணியின் கீதமான 'ஆவா தே' பாடலை ஆதித்யா பாடினார். கத்வி, அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச நேரலை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாடியுள்ளார்.சமீபத்தில் தொடங்கப்பட்ட 'கோக் ஸ்டுடியோ பாரத்' (Coke Studio Bharat) நிகழ்ச்சியிலும் இவர் இடம்பெற உள்ளார்.

இவர் 'சரதோ லகு', 'எல்லாரோ' மற்றும் 'லவ் நி பாவாய்' போன்ற பல வெற்றிகளுக்காக பிரபலமானவர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நவராத்ரா விழாவில் "டக்லா" பாடலை பாடியபோது காத்வியின் பாடலுக்கு தண்டியா பாடியுள்ளார்.

பிரதமர் காலாசி என்ற இவரின் பிரபலமான பாடலையும், ஆதித்யா கத்வியையும் பாராட்டினார். 2023 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் கோக் ஸ்டுடியோ பாரத்தில் வெளியிட்ட இந்தப் பாடல், மிக விரைவிலேயே பெரும் புகழைப் இவருக்கு பெற்றது. ஆதித்யா கத்வி முதல் சந்திப்பைக் குறிப்பிட்டுப் பதிவிட்ட ஒரு பதிவை, பிரதமர் மறுபதிவு செய்தார். இப்பதிவின் மூலம் இவர் மீதும் இப்பாடல் மீதும் தான் கொண்டுள்ள பாராட்டை பிரதமர் வெளிப்படுத்தினார்.

கத்வி, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச நேரலை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் அங்கு வாழும் இந்தியப் புலம்பெயர் சமூகத்தினருக்கு குசராத்தி நாட்டுப்புற மற்றும் சமகால இசையை வழங்கியுள்ளார். வட அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள், கலாச்சாரத் திருவிழாக்கள் மற்றும் 'கர்பா' நிகழ்வுகள் ஆகியவை இவரது வெளிநாட்டுப் பயணங்களின் ஒரு பகுதியாக அமைந்திருந்தன.

Aditya Gadhvi (born 3 April 1994) is a playback singer and lyricist from Gujarat, India. He has rendered numerous chart-topping songs in various Indian languages. He is involved in Gujarati film scoring and has released a number of singles. Among his recent notable tracks are Khalasi, Rang Morla, the Gujarat Titans anthem Aava De, and several others.

Read full biography ›

Gadhvi was born in Gujarat to a Gujarati family. His father is Yogesh Gadhvi. He speaks fluent Gujarati and Hindi.

He was a winner of ETV Lok Gayak Gujarat. A folk and Sufi singer, he sang 2 songs from the movie Kamasutra: The Revenge, which were shortlisted for nominations in the Best Original Song category for the 86th Academy Awards. After winning the show Lok Gayak Gujarat, Gadhvi performed Gujarati folk music all over Gujarat, as well as in Hong Kong. Gadhvi gave his voice to represent Gujarat's tableau in the Republic Day Parade of 26 January. This parade was in the presence of United States of America's President Barack Obama and India's Prime Minister Shri Narendra Modi, as well as thousands of other guests. He performed with A .R. Rahman as a backing vocalist in his live shows in Dubai, Vadodara, etc. Gadhvi has worked with A. R. Rahman on the Bollywood film Lekar Hum Deewana Dil.

During IPL 2023, Aditya performed the Gujarat Titans anthem "Aava De" before the match at Narendra Modi Stadium. Gadhvi has performed in a series of international live stage shows in the US and Canada. He is also featured in the recently launched Coke Studio Bharat.

He is popular for hits such as 'Sharato Lagu', 'Hellaro' and 'Love Ni Bhavai' among many others. Bollywood actress Priyanka Chopra has performed dandiya on Gadhvi's song when he performed "Dakla" song on Navratra festival.

Prime Minister Narendra Modi praised the popular song 'Khalasi' and its singer, Aditya Gadhvi. The song, released by Coke Studio India in July 2023, quickly gained popularity. PM Modi retweeted a post where Aditya Gadhvi mentioned their first meeting, expressing admiration for the singer and the song.

In the same year, he was featured on the song "Wheel of Time", from the album, Sounds of Kumbha, by Grammy-nominated producer Siddhant Bhatia alongside Ajay Prasanna and Yashraj. The album went on to be nominated at the 68th Annual Grammy Awards in the category for Best Global Music Album.

Gadhvi has performed in a series of international live stage shows in the United States and Canada, presenting Gujarati folk and contemporary music to Indian diaspora audiences. His overseas performances have included concerts, cultural festivals, and garba events held across multiple North American cities.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Aditya Gadhvi · Singers songs · 1

Aditya Gadhvi Movies List · திரைப்படங்கள் · 1

  1. Saravanan Irukka Bayamaen 2017 ♪ 5

    Saravanan Irukka Bayamaen

    சரவணன் இருக்க பயமேன்

Worked with Aditya Gadhvi