Skip to content

Popular

C

Artist profile

T. Chalapathi RaoTamil Music Director – Song Lyrics & Movies

தா. சலபதி ராவ்

About T. Chalapathi Rao

பிறப்பு · Born
22 Dec 1920, Vuyyuru
மறைவு · Died
22 Feb 1994

தாதினேனி சலபதி ராவ் (22 திசம்பர் 1920 - 22 பிப்ரவரி 1994) என்பவர் தெலுங்குத் திரைப்படத் துறையில் பணியாற்றிய இந்திய இசையமைப்பாளர் ஆவார். 1950 களின் முற்பகுதியில் இருந்து 1980 கள் வரை இவரது தொழில் வாழ்க்கை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது. இவர் டி. பிரகாஷ் ராவின் உறவினர் ஆவார்.

மேலும் படிக்க ›

இவர் 1920 ஆம் ஆண்டு திசம்பர் 22 ஆம் நாள் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள வுய்யூரு என்ற சிற்றூரில் துரோணவில்லி மாணிக்கியம்மா இரத்தய்யா இணையருக்கு மகனாகப் பிறந்தார், என்றாலும் இவர் தாத்தினேனி கோடேஸ்வர ராவ், அவரது மனைவி கோட்டம்மா ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் டி. பிரகாஷ் ராவின் உறவினர்.

இவர் மற்றொரு இசையமைப்பாளரான மோகன் தாசுடன் இணைந்து 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான புட்டில்லு திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அமரதீபம் (1956) என்ற தமிழ்த் திரைப்படமே இவர் முதலில் தனித்து இசையமைத்த திரைப்படம் ஆகும். அதன்பிறகு 1984 வரை இவர் சுமார் 125 படங்களுக்கு இசையமைத்தார். அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கு படங்களும், சில படங்கள் தமிழ்ப் படங்களும் ஆகும்.

அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடித்த படங்களுக்கு பல பிரபலமான பாடல்களை இவர் உருவாக்கினார். 1950கள், 1960கள், 1970களில், சலபதி ராவ் மற்றும் நாகேஸ்வர ராவ் கூட்டணி எண்ணிலடங்கா வெற்றிகளைப் பெற்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இல்லறிகம் (1959), புனர்ஜன்மா (1963), மனுசுலு மமதாலு (1965), நவராத்திரி (1966), தர்ம தாதா (1970), ஸ்ரீமந்துடு (1971); 1972 இல் பெருவெற்றியை ஈட்டிய தத்தா புத்ருடு, மஞ்சி ரோஜுலு வச்சாய், ரைத்து குடும்பம் ஆகியவை அடங்கும். இறுதிவரை இந்த ஜோடி கண்ணா கொடுக்கு (1973), பல்லேதூரி பாவ (1973), ஆளு மகளு (1977), ஸ்ரீ ராம ரக்ஷா (1978) உள்ளிட்ட படங்களுக்கு வெற்றிக் கூட்டணியாகத் தொடர்ந்தது.

கிருஷ்ணம் ராஜூ நாயகனாக நடித்த மஞ்சி ரோஜுலு வச்சாய், அம்மா நானா, மஞ்சி மனசு, கமலம்மா கமதம் உள்ளிட்ட படங்களும், என். டி. ராமராவ் நாயகனாக நடித்த லட்சாதிகாரி, ராமுனி மிஞ்சின ராமுடு, கலவாரி கோடலு உள்ளிட்ட படங்களும், கிருஷ்ணா நடித்த அசாத்யுடுவுடன் கூத்தாச்சாரி 116, அசாத்யுடு போன்ற பிற தெலுங்கு நாயகர்கள் நடித்த படங்களுக்கு டி. சலபதி ராவ் இசையமைத்து பாடல்கள் வெற்றி ஈட்டின.

இவர் கடைசியாக 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஜன மனம் படத்திற்கு இசையமைத்தார்.

இவர் அன்னபூர்ணாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு குழந்தை இல்லை. பின்னர் டாக்டர் ஜமுனாவை மணந்தார். இந்த இணையருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

Tatineni Chalapathi Rao (22 December 1920 – 22 February 1994) was an Indian music composer who worked in Telugu cinema. His career spanned more than three decades from the early 1950s, till 1980s. He was a cousin of filmmaker T. Prakash Rao.

Read full biography ›

Born to Dronavilli Manikyamma and Rattayya in the village of Vuyyuru in the Krishna district of Andhra Pradesh on 22 December 1920, but he was adopted by Tatineni Koteswara Rao and his wife Kotamma. He was the cousin of T. Prakash Rao.

His first film as music director was the Telugu film Puttillu in 1953 jointly with another music director, Mohan Das. His first independent work was for the Tamil film Amara Deepam (1956). Thereafter until 1984 he scored music for around 125 films mostly in Telugu and some in Tamil.

He created many popular songs for films starring Akkineni Nageswara Rao. Through the 1950s, 1960s and 1970s, Chalapathi Rao and Nageswara Rao gave innumerable hits. Notable among them are Illarikam (1959), Punarjanma (1963), Manushulu Mamatalu (1965), Navaratri (1966), Dharma Daata (1970) and Srimanthudu (1971); together with some real chartbusters in 1972 which include Datta Putrudu, Manchi Rojulu Vachhayi and Raithu Kutumbam. To the end the pair continued to create music for films including Kanna Koduku (1973), Palletoori Baava (1973), Aalu Magalu (1977) and Sri Rama Raksha (1978).

T. Chalapathi Rao's hit scores with other Telugu heroes including Manchi Rojulu Vachchayi, Amma Nanna, Manchi Manasu and Kamalamma Kamatam with Krishnam Raju, Lakshadhikari, Ramuni Minchina Ramudu, Kalavaari Kodalu with N. T. Rama Rao and films such as Goodhachari 116, Asadhyudu with Krishna.

The last film he scored music for was Janam Manam in 1984.

He was married to Annapurna with whom he did not have children and later married Dr Jamuna with whom he had two sons and a daughter.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

T. Chalapathi Rao · Music Composer songs · 33 · page 1 / 3

T. Chalapathi Rao Movies List · திரைப்படங்கள் · 8

  1. Maadi Veettu Mappilai 1967 ♪ 7

    Maadi Veettu Mappilai

    மாடிவீட்டு மாப்பிள்ளை

  2. Nalvaravu 1964 ♪ 4

    Nalvaravu

    நல்வரவு

  3. Anbu Magan 1961 ♪ 12

    Anbu Magan

    அன்பு மகன்

  4. Punar Janmam 1961

    Punar Janmam

    புனர்ஜென்மம்

  5. Meenda Sorgam 1960 ♪ 7

    Meenda Sorgam

    மீண்ட சொர்கம்

  6. Uthami Petra Rathinam 1960 ♪ 9

    Uthami Petra Rathinam

    உத்தமி பெற்ற ரத்தினம்

  7. Koodi Vazhnthal Kodi Nanmai 1959

    Koodi Vazhnthal Kodi Nanmai

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

  8. Amara Deepam 1956 ♪ 9

    Amara Deepam

    அமரதீபம்

Worked with T. Chalapathi Rao