Skip to content

Popular

Shakthisree Gopalan

Artist profile

Shakthisree GopalanTamil Music Director – Song Lyrics & Movies

சக்திஸ்ரீ கோபாலன்

About Shakthisree Gopalan

பிறப்பு · Born
25 Oct 1988, Kochi

சக்திஸ்ரீ கோபாலன் (பிறப்பு 25 அக்டோபர் 1987) ஓர் இந்தியப் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் கலைஞர் ஆவார். ஏஆர் ரஹ்மான் போன்ற சிறந்த தென்னிந்திய இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதற்காகப் பரவலாக அறியப்படுகிறார். திரைப்பட இசையைத் தவிர, பல ஆண்டுகளாகப் பல்வேறு பாப், ஆர்'என்'பி, ட்ரிப்-ஹாப் மற்றும் ஜாஸ் இசைக்குழுக்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

மேலும் படிக்க ›

சக்திஸ்ரீ பல மொழிகளில் தானே பாடல்களை இசையமைத்து வெளியிட்டும், நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார். இவர் ஒரு தொழில்முறைக் கட்டிடக் கலைஞர் ஆவார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

சக்திஸ்ரீ கோபாலன் கேரளாவின் கொச்சியில் பிறந்து வளர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை களமச்சேரியில் உள்ள ராஜகிரி பொதுப் பள்ளியில் பயின்றார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் கட்டிடக்கலை பயில்வதற்காகச் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

சக்திஸ்ரீ கர்நாடக இசையில் 13 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது, எஸ்எஸ் மியூசிக் குரல் வேட்டை 1 ஐ நடத்தியது. அப்போது இவர் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால், அது குரல் தேர்வுடன் முடிந்தது. பின்னர் 2008 இல், எஸ்.எஸ் மியூசிக் குரல் வேட்டையின் இரண்டாவது சீசனை வென்றார். 2008ஆம் ஆண்டு டாக்ஸி 4777 திரைப்படத்திற்காகத் தனது முதல் பாடலைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியான கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியை வடிவமைக்கும் பணி கிடைத்தபோது அவரைச் சந்தித்தார் சக்திஸ்ரீ. அந்த நேரத்தில் தான் இசையமைத்த இசையை அவருடன் பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் இவர் தனது இசைப்பயணத்தில் பதிவு செய்த முதல் பாடலான கடல் படத்திற்காக 'நெஞ்சுக்குள்ளே' பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், ரஹ்மானின் பாலிவுட் படத்திற்கான தலைப்புப் பாடல், ஜப் தக் ஹை ஜான் (2012) முதலில் வெளியிடப்பட்டது.

இவர் தொடர்ந்து "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்", "கற்றது களவு" போன்ற படங்களுக்குப் பல பாடல்களைப் பதிவு செய்தார்.

திரைப்படங்களுக்கான பின்னணிப் பாடலைத் தவிர, சக்திஸ்ரீ பிரசாந்துடன் இணைந்து நவம்பர் 2017 இல் பிகின் என்ற தனித்த இசைப் பாடலை வெளியிட்டார்

டிசம்பர் 2016 இல், இவர் டொராண்டோவைச் சேர்ந்த கீபோர்ட் கலைஞர்-தயாரிப்பாளரான ஹரி டஃபுசியா உடனும் ஒரு பாஸ் வாசிப்பாளரான நைகல் ரூப்னரைனுடன் இணைந்து 'பை யுவர் சைட்' வெளியிட்டார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக அக நக என்ற பாடலைப் பதிவு செய்தார். இது முதலில் அப்படத்தின் முதல் பாகத்தில் சிறிய பின்னணிப் பாடலாக ஒலித்தது. இந்தப் பாடல் முதல் பாகம் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முழுப் பாடலும் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.

2023 ஆம் ஆண்டு எஸ். சஷிகாந்த் இயக்கிய தி டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த திரைப்படத்திற்காக இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ஃப்ளவர்ஸ் மலையாளம் தொலைக்காட்சியின் சிறந்த பாடகர் - நடுவர்

Shakthisree Gopalan is an Indian vocalist, composer, songwriter and performer, famous for her collaborations with the music composers like A.R. Rahman. Aside from the film music, she is a regular in the independent music scene, performing with various bands over the years dabbling in Pop, R'n'B, trip-hop and jazz.

Read full biography ›

Shakthisree Gopalan was brought up in Kochi, Kerala. She did her schooling in Rajagiri Public School, Kalamassery. She moved to Chennai after her school and pursued her degree in architecture at the Anna University's School of Architecture and Planning.

She was trained in Carnatic music for 13 years. During her 11th standard, SS Music conducted Voice Hunt 1. Since she was under 18, it ended with the auditions. Eventually in 2008, she won the second season of SS Music's Voice Hunt. She was first auditioned in November 2008 and got the opportunity to sing her debut song for the film TN 07 AL 4777.

At the age of 13, Shakthisree Gopalan was already trained in the field of Carnatic music and rock. After having won the "SS Music Voice Hunt " title in the year 2008, Gopalan debuted into film playback in the same year in Vijay Antony's TN 07 AL 4777. She subsequently went on to record a number of songs for films such as Rajadhi Raja, Irumbukkottai Murattu Singam and Naan. She was placed third in the Chennai Live's Band hunt. In the year 2014, she performed in MCC (Madras Christian College) cultural fest at Deepwoods and National Institute of Technology, Tiruchirappalli cultural fest Festember, SASTRA University cultural fest Kuruksastra'14, VIT University cultural fest Riviera 14 and Madras Institute of Technology cultural fest Mitafest 15.

"Off the Record" consists of Vikram Vivekanand (Guitar), Satish Narayanan (Bass) and Tapas Naresh/Vinay Ramakrishnan (Drums).

Shakthisree met A.R. Rahman when she got an assignment to design his music school, KM Music Conservatory. It was around that time she shared the music she had composed with him and got to sing 'Nenjukkulle' for the movie Kadal, which would catapult her into the spotlight. Although it was the first song of the duo's now long-lived collaboration, the eponymous title track for the composer's Bollywood film, Jab Tak Hai Jaan (2012) which they recorded after "Nenjukkulle", would release before it.

The string of major successes that followed includes her works on Raja Rani, Madras, Anegan, Kaaki Sattai, Kanchana 2 among others. Not one to be confined to a single language, she also began her foray into the Telugu and Malayalam playback industries, finding just as much success in dubbed versions of Raja Rani and Kanchana 2, and Charlie.

She also released 'By Your Side' in December 2016, in which she collaborated with Hari Dafusia, a Toronto-based keyboardist-producer, and Nigel Roopnarine, a bass player. Apart from playback singing for movies, she also collaborated with Prashanth and released an indie single called Begin in November 2017.

She recorded the song Aga Naga for A. R. Rahman in the film Ponniyin Selvan, which was first used as a short background song in the first part of the movie. The song gained immense popularity among the audiences upon release of the first part. The entire song was then released as part of the main soundtrack of the second part.

She is set to debut as a music composer in January 2024 for the film The Test directed by S. Sashikanth and starring Madhavan, Nayanthara, Siddharth, and Meera Jasmine. Music composer A. R. Rahman announced her debut as music director on Twitter on 4 May 2023.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Shakthisree Gopalan · Music Composer songs · 1

Shakthisree Gopalan Movies List · திரைப்படங்கள் · 22

  1. Test 2025 ♪ 1

    Test

    டெஸ்ட்

  2. Kamali from Nadukkaveri 2021 ♪ 3

    Kamali from Nadukkaveri

    கமலி நடுக்காவேரி

  3. Vasantha Mullai 2021 ♪ 2

    Vasantha Mullai

    வசந்த முல்லை

  4. Dharala Prabhu 2020 ♪ 7

    Dharala Prabhu

    தாராள பிரபு

  5. Ganesapuram 2020 ♪ 3

    Ganesapuram

    கணேசபுரம்

  6. Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu 2020 ♪ 4

    Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu

    ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது

  7. Vaanam Kottattum 2020 ♪ 6

    Vaanam Kottattum

    வானம் கொட்டடும்

  8. Aadai 2019 ♪ 3

    Aadai

    ஆடை

  9. Saaho 2019 ♪ 5

    Saaho

    சகோ

  10. The Lion King 2019 ♪ 6

    The Lion King

    தி லயன் கிங்

  11. Chekka Chivantha Vaanam 2018 ♪ 7

    Chekka Chivantha Vaanam

    செக்க சிவந்த வானம்

  12. Velaikkaran 2017 ♪ 5

    Velaikkaran

    வேலைக்காரன்

  13. Yaadhumaagi Nindraai 2017 ♪ 5

    Yaadhumaagi Nindraai

    யாதுமாகி நின்றாய்

  14. Azhagu Kutti Chellam 2016 ♪ 5

    Azhagu Kutti Chellam

    அழகு குட்டி செல்லம்

  15. Eetti 2015 ♪ 5

    Eetti

    ஈட்டி

  16. Kanchana 2 2015 ♪ 6

    Kanchana 2

    காஞ்சனா 2

  17. Maya 2015 ♪ 3

    Maya

    மாயா

  18. Madras (2014) 2014 ♪ 6

    Madras (2014)

    மெட்ராஸ்

  19. Kadal 2013 ♪ 7

    Kadal

    கடல்

  20. Maryan 2013 ♪ 6

    Maryan

    மரியான்

  21. Raja Rani 2013 ♪ 9

    Raja Rani

    ராஜா ராணி

  22. Mariyaan 2012 ♪ 7

    Mariyaan

    மரியான்

Worked with Shakthisree Gopalan