Aalaporaan Thamizhan
ஆளப்போறான் தமிழன்
Artist profile
விஜய்
சந்திரசேகரன் ஜோசப் விஜய் (பிறப்பு: 22 சூன் 1974) என்பவர் தமிழ்நாட்டின் 9-ஆவது முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்த் திரைப்பட நடிகருமாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் இவரை "தளபதி" என்று அழைக்கின்றனர். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.
விஜய் தனது 10ஆவது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விசய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கியப் பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த ஆடல் கலைஞர். இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.
விஜய் 1974-ஆம் ஆண்டு சூன் 22 அன்று சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவர் கிறிஸ்துவ வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடகப் பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது அகவையில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனம் மிக்கவராகவும் இருந்துள்ளார். வித்யாவின் இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார். இவரது தங்கை வித்யாவின் கதை 2005ஆம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். இப்படத்தில் விஜய் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். லயோலா கல்லூரியில், காட்சித் தொடர்பியல் (விசுவல் கம்யூனிகேசன்சில்) படிப்பில் சேர்ந்த விஜய், நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே கல்லூரி படிப்பிலிருந்து வெளியேறினார்.
விஜய், பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை, 1999 ஆகத்து 25 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000 ஆம் ஆண்டு இலண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள். ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் இளமைக் காலத்திற்கு முந்தைய அகவையுடைய மகளாக தெறி (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2025-இல், இவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2026-இல், விஜய் தன்னைத் தங்கள் இல்லத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார் என்றும் குற்றம் சாட்டி, அவர் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். நடிகை திரிஷா கிருஷ்ணனுடன் ஒரு நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்ட பிறகு, அந்த மனு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
துணை நடிகர்களான சஞ்சீவ் வெங்கட், சிறீமன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் கல்லூரிப் பருவத்திலிருந்தே விஜய்யின் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் விஜய்யின் பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். பின்னணிப் பாடகர் எஸ். என். சுரேந்தர், விஜய்யின் தாய்மாமா ஆவார். நடிகர் மற்றும் கிரிக்கெட் வீரரான விக்ராந்த் விஜய்யின் உறவினர் ஆவார், இருப்பினும் விக்ராந்த் இதுவரை விஜய்யுடன் இணைந்து எந்தத் திரைப்படத்திலும் பணியாற்றவில்லை. விஜய்யின், குருவி திரைப்படத்தைத் தயாரித்த தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யைத் தனது சிறுவயது முதலே "நெருங்கிய நண்பர்" என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, உதயநிதியின் தந்தையும், அப்போதைய தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினுக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டுப் பிரச்சாரம் செய்ததைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் அரசியல் ரீதியாகப் போட்டியாளர்களாக மாறினர்.
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். மார்ச் 2026 நிலவரப்படி, விஜய்யின் நிகர மதிப்பு ₹6.25 பில்லியனுக்கும் (US$65 மில்லியன்) அதிகமாக இருந்தது. அவர் 'பீஸ்ட்' படத்திற்காக ₹1 பில்லியன் (US$10 மில்லியன்) சம்பளமும், 'வாரிசு' படத்திற்காக மதிப்பிடப்பட்ட ₹1.2 பில்லியன் (US$13 மில்லியன்) முதல் ₹1.5 பில்லியன் (US$16 மில்லியன்) வரை சம்பளமும் பெற்றார். 2023 ஆம் ஆண்டில், 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்திற்காக ₹2 பில்லியன் (US$21 மில்லியன்) சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது, இதன் மூலம் அவர் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரானார்.
Chandrasekaran Joseph Vijay (born 22 June 1974) is an Indian politician and former actor who is currently serving as the 9th chief minister of Tamil Nadu since 10 May 2026. He is the founder and president of the political party Tamilaga Vettri Kazhagam (TVK). Prior to entering politics, he was a leading actor in Tamil cinema and among the highest-paid actors in India, having won numerous accolades including multiple Tamil Nadu State Film Awards and South Indian International Movie Awards.
Following a stint as a child actor in the 1980s, Vijay made his debut as a leading man in Naalaiya Theerpu (1992), directed by his father S. A. Chandrasekhar. He rose to fame with romance films such as Poove Unakkaga (1996), Love Today (1997), Kadhalukku Mariyadhai (1997), Thullatha Manamum Thullum (1999), Kushi (2000), Priyamaanavale (2000), Friends (2001) before transitioning into an action star with Thirumalai (2003), Ghilli (2004), Madhurey (2004), Thirupaachi (2005) and Pokkiri (2007). From the 2010s onward, he starred in major commercial successes including Thuppakki (2012), Kaththi (2014), Theri (2016), Mersal (2017), Sarkar (2018), Bigil (2019), Master (2021), Leo (2023) and The Greatest of All Time (2024) which rank among the highest-grossing Tamil films.
Beyond his film career, Vijay cultivated a fan following, which he consolidated into the social welfare organisation Vijay Makkal Iyakkam (VMI) in 2009. Through VMI, he engaged in extensive philanthropic activities across Tamil Nadu. In many of his later films, such as Kaththi and Sarkar, he cultivated the image of an angry protagonist fighting against corruption, injustice, and social inequality, which frequently brought him into conflict with the state's ruling political establishment.
In February 2024, Vijay announced his retirement from cinema and his formal entry into politics. He launched the TVK, a secular and egalitarian party but an alternative to the established Dravidian parties. The TVK secured 108 seats in the 2026 Tamil Nadu Legislative Assembly election, emerging as the single-largest party and breaking the nearly half-century-long political duopoly of the DMK and the AIADMK. With the support of several smaller allied parties, Vijay was sworn in as chief minister of Tamil Nadu on 10 May 2026.
Chandrasekaran Joseph Vijay was born on 22 June 1974 in Madras, at the Government Women and Children’s Hospital in Egmore. His father, Chandrasekaran, is a film director and his mother, Shoba, is a playback singer and vocalist. His father is a lapsed Catholic and his mother is an adherent of Hinduism. Vijay had a sister, Vidhya, who died when she was two years old. Vijay did his schooling initially at Fathima school, Kodambakkam and later at Balalok school, Virugambakkam. He pursued a bachelor's degree in visual communication from Loyola College, but dropped out early to focus on his acting career.
Vijay made his debut as a child actor in the Tamil film Vetri, produced by P. S. Veerappa in 1984. He then performed in Kudumbam (1984), Naan Sigappu Manithan (1985), Vasantha Raagam (1986), Sattam Oru Vilayaattu (1987) and Ithu Engal Neethi (1988), which were all directed by his father.
Vijay played the lead role for the first time in Naalaiya Theerpu at the age of 18 in 1992. The film failed at the box office, with Vijay receiving bitter criticism for his looks and performance. Chandrasekhar decided then to cast him alongside an established hero Vijayakanth, who agreed to the project in Senthoorapandi (1993). The film was a hit, boosting Vijay's popularity with the masses. In 1994, Rasigan directed again by his father, Vijay became popular as "Ilaya Thalapathy" (Young Commander). He also made his debut as a singer. In 1995, the romantic action Deva, was a box office hit and completed the 100-day run in cinema halls. Vijay took leading roles in films such as Rajavin Parvaiyile, in which he co-starred with actor Ajith Kumar, followed by Vishnu and the romantic drama Chandralekha.
In early 1996, the romantic comedy film Coimbatore Mappillai was a hit at the box office. This was followed by Poove Unakkaga, directed by Vikraman, which according to him, gave him his initial break and popularity. His subsequent films that year were Vasantha Vaasal, Maanbumigu Maanavan and Selvaa. In 1997, Vijay appeared in Kaalamellam Kaathiruppen, Love Today and Once More, and in the latter he shared the screen with veteran actor Sivaji Ganesan. In Nerrukku Ner, he starred with actor Suriya's marked debut in the industry. Then, Vijay attracted the family audience through Fazil's Kadhalukku Mariyadhai. This film earned actor Vijay his first Tamil Nadu State Film Award for Best Actor. He was awarded Kalaimaamani by the Government of Tamil Nadu for his role. In 1998, he continued to star in romantic films such as Ninaithen Vandhai, Priyamudan and Nilaave Vaa. In 1999, the romantic drama Thullatha Manamum Thullum was a blockbuster success and helped Vijay create a fan base in Kerala. Vijay won the MGR Honorary Award and Tamil Nadu State Film Award for Best Film (second prize). The next released was Endrendrum Kadhal, Nenjinile, and Minsara Kanna. In 2000, he appeared in his 25th film, Kannukkul Nilavu, alongside commercially successful romantic films, Kushi and Priyamaanavale. In 2001, his box office successes included Friends, Badri and Shahjahan, and in 2002, he starred in the action film Thamizhan alongside Priyanka Chopra. Later, he appeared in the romantic film Youth and the action film Bagavathi in the same year.
Vijay began 2003 with Vaseegara and Pudhiya Geethai.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
2026
♪ 7
ஜன நாயகன்
2026
♪ 5
காதல் ரீசெட் ரிபீட்
லியோ
வாரிசு
2020
♪ 1
மாஸ்டர்
2019
♪ 8
பிகில்
2017
♪ 5
பைரவா
மெர்சல்
2014
♪ 6
ஜில்லா
2014
♪ 6
கத்தி
2013
♪ 5
தலைவா
2012
♪ 7
நண்பன்
2012
♪ 7
துப்பாக்கி
2011
♪ 6
காவலன்
2011
♪ 6
வேலாயுதம்
2010
♪ 6
சுறா
2009
♪ 7
வில்லு
ஹீரோவா? ஜீரோவா?
2008
♪ 6
குருவி
2007
♪ 7
அழகிய தமிழ் மகன்
2007
♪ 7
போக்கிரி
2006
♪ 6
ஆதி
2005
♪ 6
சச்சின்
2005
♪ 7
சிவகாசி
2005
♪ 7
திருபாச்சி
2004
♪ 6
கில்லி
2004
♪ 5
மதுர
2004
♪ 6
உதயா
2003
♪ 6
புதிய கீதை
2003
♪ 6
திருமலை
2003
♪ 6
வசீகரா
2002
♪ 6
பகவதி
2002
♪ 5
தமிழன்
2002
♪ 7
யூத்
2001
♪ 8
பத்ரி
2001
♪ 8
ப்ரெண்ட்ஸ்
2001
♪ 7
ஷாஜகான்
2000
♪ 7
கண்ணுக்குள் நிலவு
2000
♪ 7
குஷி
2000
♪ 7
பிரியமானவளே
1999
♪ 8
என்றென்றும் காதல்
1999
♪ 5
மின்சாரக் கண்ணா
1999
♪ 7
நெஞ்சினிலே
1999
♪ 6
பெரியண்ண
1999
♪ 8
துள்ளாத மனமும் துள்ளும்
1998
♪ 6
நிலாவே வா
1998
♪ 8
நினைத்தேன் வந்தாய்
1998
♪ 6
ப்ரியமுடன்
1997
♪ 6
காலமெல்லாம் காத்திருப்பேன்
1997
♪ 6
காதலுக்கு மரியாதை
1997
♪ 8
லவ் டுடே
1997
♪ 6
நேருக்கு நேர்
1997
♪ 5
ஒன்ஸ் மோர்
1996
♪ 5
கோயமுத்தூர் மாப்ளே
1996
♪ 6
மாண்புமிகு மாணவன்
1996
♪ 6
பூவே உனக்காக
1996
♪ 5
செல்வா
1996
♪ 2
வசந்த வாசல்
1995
♪ 9
சந்திரலேக்கா
1995
♪ 7
தேவா
1995
♪ 6
ராஜாவின் பார்வையிலே
1995
♪ 6
விஷ்ணு
1994
♪ 7
ரசிகன்
1993
♪ 5
செந்தூரப் பாண்டி
1992
♪ 6
நாளைய தீர்ப்பு
1991
நண்பர்கள்