இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(31-01-2023)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(31-01-2023)

Jan 31, 2023 - 06:51
 0  614
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(31-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்

சுபகிருது ஆண்டு – தை 17 

1,*#நாள்*: செவ்வாய்கிழமை (31.01.2023)

2,*#நட்சத்திரம்*: ரோஹிணி நாள் முழுவதும் பிறகு மிருகசீரிடம்

3,*#திதி* : மாலை 03:50 வரை தசமி பின்னர் ஏகாதசி

4,*#யோகம்* : அமிர்த - சித்த யோகம்

5,*#கரணம்* : கரசை மாலை 03:45 வரை பின்பு வணிசை 

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

*#செவ்வாய்க்கிழமை* 
சுபஹோரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

*#இன்று*:கரிநாள்

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்
03.00 - 04.30
எமகண்டம்
09.00 - 10.30
குளிகை
12.00 - 01.30

#சூலம்:வடக்கு
பரிகாரம்-பால்

*#சந்திராஷ்டமம்*
விசாகம்

#நாள்:மேல் நோக்கு நாள்

#லக்னம்: மகர லக்னம் இருப்பு நாழிகை 02 வினாடி 21

சூரிய உதயம்
06:36 காலை / 
சூரிய அஸ்தமனம்
06:35 மாலை /

நடிகர் நாகேஷ் அவர்களின் நினைவு தினம் 

#இன்றைய_ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. புது பொருள் சேர்க்கை உண்டாகும். குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரவும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். பண விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய விஷயங்கள் நடக்கும். பொருளாதார நெருக்கடி குறையும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, உறவினர்களிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். நவீன பொருட்களை கவனமாக கையாளவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, புதிய முயற்சிகள் பலிதமாகும். சுற்று வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே, மற்றவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசவும். பண வரவு சுமாராக இருக்கும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப பாரம் கூடும். எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களால் மற்றவர்கள் பயனடைவர். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும் ராசிக்குள் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்

மகரம்

மகர ராசி அன்பர்களே, குடும்பத்தினருடன் வீண் வாதம் செய்ய வேண்டாம். எதிரிகளின் பலம் வெகுவாக குறையும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்த மன கசப்பு மாறும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீனம்

மீன ராசி அன்பர்களே, குடும்ப பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow